செவ்வாய், அக்டோபர் 20, 2020

விளையாட்டு

img

ஆஷஸ் தொடர் : இங்கிலாந்து அணி 67 ரன்களில் சுருண்டது!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் 3-வது டெஸ்ட் தொடரில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 67 ரன்களில் சுருண்டது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் 3-வது டெஸ்ட் தொடர் ஹெட்டிங்லேயில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 179 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்தின் ஜாப்ரா ஆர்சர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய முதலே ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்  தடுமாறியது. இதனால் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சரிய 67 ரன்னில் சுருண்டது . ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹசில்வுட் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.

 இதேபோல் 1948-ஆம் ஆண்டு  இங்கிலாந்து கிரிக்கெட் அணி குறைந்த ரன்னில் ஆட்டமிழந்தது.அதற்கு பின்னர் 71 வருடங்களுக்கு பிறகு இந்த சரிவை சந்தித்துள்ளது. 
 

;