புதன், அக்டோபர் 28, 2020

விளையாட்டு

img

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிர் காலமானார்

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிர் நெஞ்சுவலியால் காலமானார்.

அப்துல் காதிரின் வயது 63.லாகூரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இவர் பாகிஸ்தான் அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ,236 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.அப்துல் காதிரின் மறைவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.


 

;