செவ்வாய், அக்டோபர் 20, 2020

விளையாட்டு

img

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட், முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கபில் தேவ் தலைமையிலான தேர்வு குழு, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை மீண்டும் தேர்வு செய்துள்ளது.  
2021 ஆம் ஆண்டு வரை ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

;