புதன், அக்டோபர் 28, 2020

விளையாட்டு

img

உலகக்கோப்பை கிரிக்கெட்

சிட்னி 

உலகக்கோப்பை தொடரின் 12-வது சீசன் வரும் மே 30-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது.இந்த தொடருக்காக கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றானஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜை ரிச்சர்ட்சனுக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.காயத்தின் வீரியம் அதிகமாக இருப்பதால் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் எச்சரித்ததால் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.அவருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி விபரம்:  ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், நாதன் கோல்டர்நைல், ஜேஸன் பெஹ்ரென்டார்ஃப், ஆடம் ஸாம்பா, நாதன் லயன்.காயத்தால் விலகியுள்ள ஜை ரிச்சர்ட்சன் வலது கை வேகப்பந்துவீச்சாளர் ஆவார்.எந்த பிட்ச்சாகஇருந்தாலும் 143 கிமீ வேகத்திலும் ஸ்விங் செய்யும்திறமை வாய்ந்தவர்.ஷார்ட் பிட்ச் வகை பந்துகளை எகிற வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறவைக்கும் சிறப்பு திறன் படைத்தவர். 

;