facebook-round

img

தமிழுலகம் சூர்யாவை உச்சி முகரும்! - பத்திரிகையாளர் குணசேகரன்

ஒரு 10, 15 ஆண்டுகளுக்கு முன் நேரில் பார்த்தும், கண்டும் கடந்தும்போன செய்தி, உணர்ச்சிபூர்வமாக கண்முன் விரிய காணும்போது பல தருணங்களில் சிலிர்த்துப்போனேன். ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், எதிர்கொண்ட சவால்களை கருவாகக் கொண்டு, இத்தனை நேர்த்தியாகவும் ஈர்க்கும்படியும் படமெடுக்க முடியுமா?

விமான நிலையத்தையும் விமானங்களையும் ஏர் டெக்கான் கௌன்டர்களையும் ஏக்கத்தோடு பார்த்துப்போன என் இளம்வயது நினைவுகளை கிளறிவிட்டது. தந்தை மரணப்படுக்கையில் கிடக்க, ஊர் திரும்ப சூர்யா பரிதவிக்கும் காட்சிகளின்போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சூர்யா மாறனாக வாழ்ந்திருந்திருக்கிறார்

முதல் விமான பயணம் நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு விமானப் பயணத்திலும் புதிதாக விமானம் ஏறும் பயணிகளை, முதிய தம்பதிகளை காணும்போதெல்லாம் என்னை அறியாமல் முகம் மலரும்.

You are a socialite. I am a socialist!

Democratisation of growth is the social goal of Dravidian movement.

சினிமாத்தனங்களைத் தாண்டியும் மனதில் நிற்கிறது படம்.

வானம் எல்லோருக்கும் வசப்படட்டும்!

சென்சார் இல்லாத ஓடிடியால் சில கருவாட்டுக் காட்சிகளும் கறாரான வசனங்களும் தப்பி இருக்கின்றன.

பொருளாதார ஏற்றத்தாழ்வை மட்டுமல்ல, கொடிய சாதிய ஏற்றத்தாழ்வையும் உடைத்தெறிய விரும்புகிறேன் என்றொரு முத்திரை வசனம். (I want to break the cost barrier and the damn caste barrier too. சொந்த வாழ்க்கையில் ஜாதியை நிராகரித்த மனிதனாக இந்த வசனத்தை பேச எல்லா தகுதிகளும் கொண்டவர் சூர்யா. கேப்டன் கோபிநாத்துக்கு cost brrier-அய் தகர்ப்பது மட்டுமே இலக்காக இருந்திருக்கலாம். திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கங்களும் சமத்துவச் சிந்தனையை படரவிட்ட தமிழ் மண்ணில், சூர்யாவுக்கு மட்டுமல்ல, இயக்குநர் சுதா, வசனகர்த்தா 'உறியடி' விஜயகுமாரும் caste barrier என தளத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இயல்பாகவே.

பஞ்ச் டயலாக் எழுதுவோர் எதிர்காலத்தில் கவனத்தில் கொள்வார்களாக!

What a great comeback, Surya!

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி

வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.

வேட்டையாடப் படுபவர்களெல்லாம்

வீழ்ந்து விடுவதுமில்லை!

குத்திக் குதறப்படுபவர்களெல்லாம்

நிலைகுலைந்து போவதும் இல்லை!

தங்கள் தகுதியால், திறமையால் திமிறி எழுவார்கள்

வீறுகொண்டு நிற்பார்கள்.

தமிழுலகம் சூர்யாவை உச்சிமுகரும்!

மகிழ்ச்சியை மட்டுமல்ல நெகிழ்ச்சியையும் தந்திருக்கிறார், மாறனாக வாழ்ந்த சூர்யா!

#சூரரைபோற்று

#சூர்யாவைப்போற்று

Gunaa Gunasekaran

 

 

;