india

img

தெருக்களில் இருந்த சாதிப்பெயர்களை நீக்கியது மகாராஷ்டிர மாநில அரசு... சமூக நல்லிணக்கம்- தேசிய ஒற்றுமைக்கான நடவடிக்கை

மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில்தெருக்கள் மற்றும் வீதிகளில் இருந்த சாதிப்பெயர்களை நீக்கி, அம்மாநிலத்தின்மகா விகாஸ் அகாதி கூட்டணிஅரசு உத்தரவிட்டுள்ளது.அத்துடன் சாதிப்பெயர்களுடன் இருந்த தெருக்களுக்கு புதிய பெயர்களையும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றைவெளியிட்டுள்ளது. அதில், “மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில், மகர்-வாடா, பவுத்-வாடா, மாங்க்-வாடா, தோர்-வாஸ்தி, பிராமன்-வாடா,மாலி-கல்லி என சாதி ஒட்டுடன் பொது இடங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டு உள் ளன.ஆனால், மகாராஷ்டிரா போன்ற முற்போக்கான மாநிலத்தின் தகுதிக்கு இப்பெயர்கள் ஏற்றவை அல்ல. எனவே, சமூக நல்லிணக்கத்தையும், தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்பதற்காக சாதிப் பெயர்களை நீக்கிவிட முடிவுசெய்யப்பட்டுள்ளது. அவற் றுக்குப் பதிலாக, சமதா நகர்,பீம் நகர், ஜோதி நகர், சாகுநகர், கிராந்தி நகர் போன்றபெயர்கள் சூட்டப்பட உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.“பெயர் மாற்ற நடவடிக்கையின் மூலம் பொதுமக்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். நாங்கள்சாதி அமைப்பை படிப்படியாக ஒழிக்க விரும்புகிறோம். இங்கு அனைவருக்கும் மரியாதையுடன் வாழ உரிமை உள்ளது. யாரையும் சாதி அல்லது மதத்தை வைத்து குறைத்து மதிப்பிடக் கூடாது” என்று மகாராஷ்டிர சமூகநீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

;