tamilnadu

img

தேர்தல் பணியாற்றிய அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் மோசடி சென்னை மண்டல அலுவலகம் முன்பு மறியல் போராட்டம்

சென்னை,மே.6-சென்னை அயன்புரம் மண்டலம் 6ல் தேர்தல் பணிசெய்த (பிஎல்ஓ) அங்கன்வாடி மற்றும் அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களின் உழைப்பை சுரண்டிய அதிகாரிகளை கண்டித்து அயன்புரம் மண்டலம் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர்கள் பற்றிய விவரங்களை சேகரிப்பு பணியில் அங்கன்வாடி மற்றும் அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இவர்களுக்கு உரிய ஊதியத்தை தராமல் சில அரசு அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மண்டலம் 6ல் பணி செய்யாத 447 தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டுள்ள னர்.மேலும் சிலரிடம் ரூ. 7 ஆயிரத்து 150 பெற்றுக் கொண்டதாக கையெழுத்து வாங்கியுள்ளனர். ஆனால்,ரூ. 4 ஆயிரம் மட்டுமே அவர்களுக்கு வழங்கியுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டது மேற்பார்வையாளர்கள் என கூறப்படுகிறது.இந்நிலையில் திங்களன்று (மே 6) அயன்புரத்தில் உள்ள பெருநகர மாநகராட்சி அலுவலகத்தை பாதிக்கப்பட்ட அங்கன்வாடி மற்றும் அரசு ஓய்வு பெற்றஊழியர்கள் முற்றுகையிட்டனர்.அங்கன்வாடி ஊழியர்சங்கத்தின் வடசென்னைமாவட்டச் செயலாளர் நிர்மலா, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட அமைப்பாளர் மணிமேகலை ஆகியோர் தலைமை தாங்கினர்.பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் முன்வராததால் முற்றுகை போராட்டம், சாலை மறியலாக மாறியது.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டு ள்ளதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

;