tamilnadu

img

செமஸ்டர் தேர்வு முடிவுகள்: அண்ணா பல்கலை. வெளியீடு

சென்னை:
ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகளை இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டன.

ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டரில், இறுதியாண்டு மாணவர்களைத் தவிர, பிறருக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகளின் அடிப்படையிலும், உள் மதிப்பீடு அடிப்படையிலும் மதிப்பெண்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.இளநிலை படிப்புகளில் முதலாம் ஆண்டு, 2ஆம் ஆண்டு  3 ஆம் ஆண்டு, முதுநிலை படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஏப்ரல் - மே மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
www.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு விரைவில் தேர்வு நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

;