tamilnadu

செங்குன்றம் - பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் ஓட்டுநர்கள் - ஊழியர்களுக்கு இடையே மோதல்

சென்னை.ஏப்,24-சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் புழல் காவாங்கரை பகுதியில் இருந்து கவரப்பேட்டை நோக்கி தனியார் கம்பெனி வேன் ஒன்று வேலை ஆட்களை அழைத்துச் சென்றது. அப்போது, சுங்கச்சவாடியில் கட்டணம் செலுத்துவதில் மினி வேன் ஓட்டுனர் பன்னீர்செல்வம், உதவியாளர் ஜேம்ஸ் ஆகியோருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மினிவேன் ஓட்டுநரை தாக்கியதால் அனைத்து வாகன ஓட்டிகளும் மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.மேலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் மது அருந்தியதாக குற்றம்சாட்டி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சுங்கக்கட்டணம் வசூலிக்கும்அறைகளில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.இதுபற்றி தகவலறிந்து வந்த காவல்துறையினர் சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதாக கூறியதைத் தொடர்ந்து,பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சாலையில் இருபுறமும் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

;