tamilnadu

img

சேலத்தில் களைகட்டிய மாம்பழ சீசன் விளைச்சல் குறைவால் விலை உயர்வு

சேலம், மே 21-சேலத்தில் மாம்பழ சீசன் களைகட்டியுள்ள நிலையில் இவ்வாண்டு விளைச்சல் குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.சேலம் மாவட்டத்தில் உள்ள மண் வளம், கனிம வளம் ஒன்று சேர்ந்து விளைவதால் சேலம் மாம்பழம் எப்போதுமே கூடுதல் சுவையும் மணமும் கொண்டதாகவே விளங்குகிறது. சேலத்தில் இந்த ஆண்டு நடு சாலை, செந்தூரா, நீளம், கிளிமூக்கு, சர்க்கரைகட்டி, மல்கோவா, இமாம் பிசாந், சேலம் குண்டு, பெங்களூரா உள்ளிட்ட மாம்பழங்கள் தற்போது பயிடப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மாம்பழ சீசன் களைகட்டி உள்ள நிலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, மேட்டூர், வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழத்தின் வரத்தும் அதிகரித்துள்ளது. இந்தமுறை சீசனுக்கு முன்பாகவே மாம்பழம் விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா என அனைத்து அயல் நாடுகளுக்கும் மாம்பழம் வைக்கப் படுகிறது. அதேநேரம், வழக்கத்தை விட இந்த ஆண்டு மாம்பழத்தின் விளைச்சல் குறைவாக இருப்பதால் விலை 30 முதல் 40 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

;