tamilnadu

img

பாரத் சர்க்கார் பெயரில் புதிய ஒரு ரூபாய் நோட்டு

புதுதில்லி:
பாரத் சர்க்கார் பெயரில் புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ள தாகவும், அதில் இந்திய அரசு என்பதற்கு பதிலாக பாரத் சர்க்கார் என குறிப்பிடப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது. ஒரு ரூபாய் நோட்டுகளை மட்டும் இந்தியநிதி அமைச்சகம் வெளியிடுவது வழக்கம். அதில் இந்திய அரசு (GOVERNMENT OF INDIA)என குறிப்பிடப்பட்டிருக்கும். மற்ற அனைத்து ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அவற்றில் இந்திய ரிசர்வ் வங்கி (RESERVE BANK OF INDIA) என குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது மத்திய நிதி அமைச்சகம் வெளியிடவிருக்கும் ஒரு ரூபாய் நோட்டுகளில் 

·    இந்திய அரசு என்பதற்கு பதிலாக பாரத் சர்க்கார் என உள்ளதாக கூறப்படுகிறது. 

·    நிதி அமைச்சக செயலாளரின் கையெழுத்து இடம்பெறும். 

·    ரூபாய் என்பதை குறிக்கும் அடையாளமும் சத்தியமே ஜெயதே வாசகமும் இடம் பெற்றிருக்கும்.

·    வலது புறம் கீழ் பகுதியில் வரிசை எண் இடம்பெறும்.

·    முதல் 3 எண்களும், எழுத்துகளும் ஒரே அளவாக இருக்கும்.

·    தானியத்தின் வடிவமைப்புடன் கூடிய ரூபாய் சின்னம் பொறிக்கப்படும். இது நாட்டில் விவசாய எழுச்சியைக்குறிக்கிறது. 

·    ரூபாயின் மதிப்பு 15 இந்திய மொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

·    இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்கள் தூக்கலாக 9.7X 6.3 செ.மீ. அளவில் இருக்கும்.

;