tamilnadu

img

புதிய ராணுவ  தளபதி பொறுப்பேற்பு

புதுதில்லி:
இந்திய ராணுவத்தின் 28-ஆவது தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவானே டிசம்பர் 31 செவ்வாயன்று பொறுப் பேற்றார்.ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த  பிபின் ராவத் ஓய்வுபெற் றார்.  இதனைத்தொடர்ந்து  ராணுவ துணைத் தளபதியான முகுந்த் நரவானே, தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.நரவானே, சீனாவுடனான இந்திய எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் பயிற்சியை முடித்தார்.  1980-ஆம் ஆண்டு சீக்கிய காலாட் படையில் இணைந்து தனது ராணுவப் பணியை தொடங்கினார்.கடந்த 37 ஆண்டுகளாக ராணுவ பணியில் இருக்கும் நரவானே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியை கட்டுப்படுத்து வது, அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிறப்பாகப் பணியாற்றினார். ஜம்மு-காஷ்மீரில் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படைப் பிரிவு மற்றும் காலாட் படையின் கமாண்டராக இருந்துள்ளார்.

;