tamilnadu

img

"பிஎம் கேர்ஸ்’ அமைப்பை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்...

புதுதில்லி:
புதிதாக ஏற்படுத்தப்பட்ட ‘பிஎம் கேர்ஸ்’ (PM CARES) அமைப்பை தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கொண்டுவர வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நிவாரண நிதியம் (Prime Minister’s Relief Fund - PMRF) இருக்கும் போது, கொரோனா நிவாரண நன்கொடைகளுக்காக, மோடி அரசு,‘பிஎம் கேர்ஸ்’ (PM CARES FUND) என்றபெயரில் புதிதாக ஒரு நிதியத்தை துவங்கியது, சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.பிஎம் கேர்ஸ் நிதியம் ஏற்படுத்தப் பட்டதன் நோக்கம், அதனுடைய செயல்பாடு குறித்து, ஸ்ரீஹர்ஷா கந்துகுரி என்பவர், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விவரங்களை கேட்டபோது, “தகவலுரி மைச் சட்டம் 2005 பிரிவு 2 எச்- படி,பிஎம் கேர்ஸ் நிதியம், பொது அதிகாரத்தின் கீழ் வராது” என பிரதமர் அலுவலகம் கடந்த மே 31-ஆம் தேதி கூறிவிட்டது. 

இந்த சூழலில்தான் “இனிமேல் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் யார் விண்ணப்பித்தாலும் இதே பதில்தான் கிடைக்கும் என்பதால், ‘பிஎம் கேர்ஸ்’ நிதியத்தை தகவல் உரிமைச் சட்டத்தின் (Right To Information Act - RTI) கீழ் கொண்டு வர வேண்டும்” என்று சுரேந்தர் சிங் ஹூடா என்ற வழக்கறிஞர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.“பிஎம் கேர்ஸ் பெற்ற நன்கொடை, நிதியை செலவிட்ட விதம் ஆகிய வற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்றும் “ஒருவேளை ‘பிஎம் கேர்ஸ் நிதியம்’ பொது அமைப்பு அல்லஎன்றால், அந்த அமைப்புக்கு பொதுத்துறை நிறுவனங்கள், உயர்மட்டத்தில் உள்ள அரசு அமைப்புகள், அதிகாரி கள் நிதி அளிக்கத் தூண்டியது எது? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்றும் ஹூடா தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி, இம்மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மனுதாரர் சுரேந்தர் சிங் ஹூடா கோரிக்கை விடுத்த நிலையில், ஜூன் 10-இல் விசாரிப்பதாக தில்லி நீதிமன்றம் கூறியுள்ளது.இதேபோல மும்பை உயர்நீதி மன்றத்தின் நாக்பூர் அமர்வில் வழக்கறிஞர் அரவிந்த் வாக்மாரே என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;