science

img

தானாகவே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முக கவசத்தை வடிவமைத்த இஸ்ரேலிய விஞ்ஞானிகள்

தானாகவே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முக கவசத்தை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அனைத்து நாடுகளுக்கு, தங்கள் நாட்டு மக்களை முக கவசம் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளன. இந்த நிலையில், யு.எஸ்.பி போர்ட் உடனான தானாகவே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முக கவசத்தை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். செல்ஃபோனை சார்ஜ் செய்வது போல 30 நிமிடங்களுக்கு இந்த முக கவசத்தை சார்ஜ் செய்தால் உள்ளே இருக்கும் கார்பன் இழைகளுக்குள் 158 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உருவாக்கப்படும். இதனால் வைரஸ்கள் கொல்லப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, மீண்டும் இந்த முககவசத்தை உபயோகிக்க முடியும். 
 

;