internet

img

டுவிட்டரில் சாம்சங் ஸ்மார்ட் டிவியில் வைரஸ் தாக்குதல் குறித்த எச்சரிக்கை பதிவு நீக்கம்

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவியில், வைரஸ் தாக்குதல் ஏற்படாமலிருக்க அடிக்கடி டிவியை ஸ்கேன் செய்து கொள்ளும்படி அறிவுறுத்திய டுவிட்டர் பதிவை, 
சாம்சங் நிறுவனம் சில மணி நேரங்களில் நீக்கியது.

இந்தியாவில் டிவி விற்பனையில் முதல் இடத்தில் சாம்சங் நிறுவனம் இருந்து வருகிறது. இதற்கு காரணம், சாம்சங் நிறுவனத்தின் சாதனங்களுக்கு வழங்கப்படும் அதிக வாரண்டி மற்றும் அதிக ஆயுட்காலம் போன்றவையே ஆகும். 

இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் அமெரிக்க பிராந்திய டுவிட்டர் பக்கத்தில், ‘கம்ப்யூட்டர் எந்தவித கோளாறும் இல்லாமல், தொடர்ச்சியாக இயங்க வேண்டுமென்றால், வைரஸ் ஸ்கேன் செய்வது அவசியம் ஆகும். அதேபோல்,
ஸ்மார்ட் டிவி வைஃபையில் இணைக்கப்பட்டு இருந்தால், அதற்கும் இது பொருந்தும். இதிலிருந்து உங்கள் டிவியை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு ஒரு முறையாவது ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்மார்ட் டிவியை ஸ்கேன் செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்’  என்று டுவிட் செய்யப்பட் இருந்தது. அதனுடன் ஸ்மார்ட் டிவி ஸ்கேன் செய்வது தொடர்பான வீடியோவையும் இணைக்கப்பட்டிருந்தது. 

இதை அடுத்து, இந்த டுவிட் வெளியாகி வைரலாக பரவி வந்த சில மணி நேரங்களில், சாம்சங் நிறுவனம் அந்த பதிவு நீக்கப்பட்டது. இது குறித்து, சாம்சங் நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், இந்த எச்சரிக்கையை பதிவை தொடர்ந்து பயனாளர்கள் தங்களது ஸ்மார்ட் டிவியை ஸ்கேன் செய்து வருகின்றனர். 
 

;