tamilnadu

img

கோவிட் மருந்து இரண்டாம் கட்ட சோதனை; கொச்சியில் ஒரு நிறுவனத்திற்கு அனுமதி...

கொச்சி:
கோவிட் சிகிச்சைக்கான இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தகொச்சியை தளமாகக் கொண்ட ஒருநிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலின் அனுமதி கிடைத்துள்ளது. பி.என்.பி வெஸ்பர் லைப் சயின்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் அந்த உரிமத்தைப்பெற்றது. மருத்துவ சோதனை 60 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று பிஎன்பி வெஸ்பர்தலைமை நிர்வாக அதிகாரி பிஎன் பலராம் தெரிவித்தார்.

உலகின் முதல் முறையாக புதியதொரு மருந்து ஆய்வகம் கோவிட் நோயாளிகளுக்கு மருந்தை பரிசோதிக்க உள்ளது. பிஎன்பி வெஸ்பர் லைப்சயின்சஸின் மருந்தான பிஎன்பி 001இன் ஆரம்ப சோதனைகள் வெற்றிகர மாக முடிந்தபின் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலின் (டிஜிசி) ஒப்புதல்கிடைத்தது. சிறிய செல் நுரையீரல்புற்றுநோய்க்காக உருவாக்கப் பட்டுள்ள இந்த வேதிப்பொருள் கோவிட் நோயாளிகளுக்கு அறிவியல் பூர்வமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பிஎன்பி வெஸ்பர் தலைமை நிர்வாகஅதிகாரி பிஎன் பலராம் கூறுகையில், இது வெற்றிகரமாக இருந்தால், இந்தியாவிலிருந்து வரும் உலகின் முதல்கோவிட் எதிர்ப்பு மருந்தாக இது இருக்கும் என்றார். கோவிட்டுக்கு சிகிச்சை யளிக்க தற்போது பயன்படுத்தப்படும் மருந்துகளை விட PNB 001 மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் நீங்க இது உதவுகிறது.

பைரெக்ஸியா ஆய்வுகளில் ஆஸ்பிரினை விட 20 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது என்பதை PNB 001 தெளிவாக்கியுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.சோதனையின் முதல் கட்டம் 74 பேரிடம்செய்யப்பட்டது. இரண்டாம் மற்றும்மூன்றாம் கட்ட மருந்துகள் தற்போதுபுனே பிஎம்ஜி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் 40 நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. நிறுவனத்தின் தலைமையின் கீழ் இங்கிலாந்தி லும் இதற்கு இணையான சோதனைகள் முன்னேறி வருகின்றன.

;