tamilnadu

img

மேட்டுப்பாளையம் : தலா ரூ.10 லட்சம் நிவாரணம், அரசு வேலை... முதலமைச்சர் அறிவிப்பு

கோவை:
கோவை மேட்டுப்பாளையம் நடூரில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 18 செ.மீ. அளவில் மழை பெய்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 17 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 4 லட்ச ரூபாயும்,முதலமைச்சர் சிறப்பு நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக தலா 6 லட்ச ரூபாயும் வழங்கப்படும்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு அவர்களு டைய தகுதிக்கு ஏற்ப அரசுவேலை வழங்கப் படும். வீடுகளை இழந்தோருக்குகுடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித்தரப்படும். சுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறார். இதில் சட்டத்துக்குஉட்பட்டே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.இடிந்து விழுந்தது தீண்டாமைச் சுவரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, விசாரணைக்குப் பிறகு அது தெரிய வரும் என்று முதல்வர் பதிலளித்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

;