tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,528 பேருக்கு கொரோனா தொற்று... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கி 4 மாத காலம் ஆகியும் இன்னும் கட்டுக்குள் வராமல் மக்களின் இயல்பு நிலையை கடுமையாக பாதித்து வருகிறது. கிராமம், நகரம் என பாரபட்சமின்றி தாறுமாறான வேகத்தில் பரவி வரும் கொரோனாவால் மக்கள் பயந்த நிலையில் தான் தினசரி பொழுதை கழித்து வருகின்றனர்.   

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,528 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,86,052 ஆக உயர்ந்துள்ளது.  இன்று ஒரே நாளில் (செப்., 10) 64 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 6,185 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை 4.29 லட்சம் பேர் கொரோனாவை வென்றுள்ளனர்.

சென்னை நிலவரம்...  

இன்றைய பாதிப்பு : 991

மொத்த பாதிப்பு : 1,45,606 

பலி : 11

மொத்த உயிரிழப்பு : 2,921   

;