tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 6,785 பேருக்கு கொரோனா தொற்று... பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது... 

சென்னை 
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கணிக்க முடியாத அளவிற்கு மின்னல் வேகத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த ஒருவாரமாக பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தில் உள்ள நிலையில், வியாழனன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமனோர் பாதிக்கப்பட்டனர். இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வெள்ளியன்றும் தினசரி பாதிப்பு புதிய உச்சமாக 6,785 ஆக (வெளிப்பகுதியில் இருந்து - 59 நபர்கள்) உயர்ந்துள்ளது.

இதன்மூலம் மொத்த பாதிப்பு 2 லட்சத்தை (1,99,749) நெருங்கியுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 88 பேர் பலியாகிய நிலையில், மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 3,320 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று (வெள்ளி) ஒரே நாளில் 6,504 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,43,297 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 53,132 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  

பரிசோதனைகள் விபரம்:
தமிழகத்தில் கொரோனா அறிகுறிகளுடன் வந்த 65,150 மாதிரிகளில் 63,182 மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 6,785 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பரிசோதனைக்கு வந்த மொத்த மாதிரிகள் 22,23,019 ஆகவும், பரிசோதனை செய்த மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 21,38,704 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் 114 ஆக உயர்ந்துள்ளது. 

;