tamilnadu

img

சிறந்த கல்வி நிறுவனம்: சென்னை ஐஐடி-க்கு முதலிடம்

சென்னை:
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள் ளது.சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச் சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.இதில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. ஐஐஎஸ்சி பெங்களூரு 2 ஆம் இடத்தையும், தில்லி ஐஐடி 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறுவதற்காக மொத்தம் 5805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித் துள்ள நிலையில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள் ளது.சிறந்த பல்கலைக்கழகங் களுக்கான தரவரிசையில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தை பிடித்துள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் இரண்டாவது இடத் தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

;