tamilnadu

நகைக்கடனுக்கான வட்டி மானியம் ரத்து பாஜக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை, டிச.22- விவசாயிகள் பெறும் நகைக்கட னுக்கான வட்டி மானியத்தை முற்றி லும் ரத்து செய்து,விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல் தொடுத்துள்ள மத்திய பாஜக அரசுக்கு விவசாயி கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளையும், விவ சாயத்தையும் பாதுகாக்க வேண் டிய அரசு விவசாயிகள் நீண்டகால மாக போராடிப் பெற்ற உரிமை களையும், சலுகைகளையும் பறிக் கும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. விவசாயத்திற் காக பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று நாடு முழு வதும் விவசாய சங்கங்கள் கோரி வருகின்றன. கடனை திரும்பச் செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை என்பது தொடர் கதை யாகி வருகிறது. ஆனால் மத்திய அரசு கொஞ்சமும் கருணையின்றி விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய முடியாதென்று பிடிவாதமாக கூறிவருகிறது.  இந்த நிலையில், குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்த கதையாக, விவசாயிகள் பெறும் நகைக் கடன்களுக்கான வட்டி மானியத்தை முற்றிலும் ரத்து செய்து மத்திய அரசு உத் தரவிட்டிருப்பது விவசாயிகள் மீதான கொடூரமான தாக்குதலா கும். ஏற்கனவே 11 சதவீத வட்டியில் 4 சதவீதத்தை மத்திய அரசு மானி யமாக வழங்கி வந்தது. அதாவது 7 சதவீத வட்டியில் விவசாயிகளு க்கு கடன் கிடைக்கப் பெற்றது. தற்போது இதை உயர்த்தி குறைந்த பட்ச வட்டி 9.25 சதவீதமாக உயர்த்தி அறிவித்திருப்பதை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வன்மையாகக் கண் டிக்கிறது.  விவசாயத்திற்கு சம்பந்த மில்லாதவர்கள் இச்சலுகையை முறைகேடாக பயன்படுத்துகிறார் கள் என்ற காரணத்தை வேளாண் மைத் துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது. விவசாய நகை கடன், சிட்டா, அடங்கல் கொடுப்பவர் களுக்குத்தான் வழங்கப்படுகிறது. இது இல்லாமல் கடன் பெற்று, சலு கையை பெறுகிறார்கள் என்றால் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதி லாக ஒட்டுமொத்த விவசாயிகளுக் கும் தண்டனை வழங்குவது அடா வடித்தனமான நடவடிக்கையாகும்.  பெருமுதலாளிகளுக்கு ஏராள மான சலுகைகள், வங்கிக்கடன் வசதி, கடன் தள்ளுபடி என்று வாரி வழங்கி கார்ப்பரேட் ஆதரவு அரசு என்பதை ஒவ்வொரு நடவடிக்கை யிலும் மத்திய பாஜக அரசு வெளிப் படுத்தி வருகிறது. ஆனால் இந்த அரசு விவசாயிகளுக்கு விரோத மாக தொடர்ந்து செயல்பட்டு வரு கிறது என்பதை விவசாயிகள் கவ னத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு, விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் வட்டிமானி யம் ரத்து மற்றும் விவசாய கடன் வட்டி உயர்வு உத்தரவை உடனடி யாக திரும்பப் பெற வேண்டு மென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. தமிழக அரசு இப்பிரச்சனையில் தலை யிட்டு, வட்டிமானியம் ரத்து உத்த ரவை திரும்பப்பெறுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு வேண் டிக் கேட்டுக் கொள்கிறோம். மத்திய அரசின் விவசாயிகளுக்கு விரோத மான இந்த நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் கண்டனப் போராட்டங்களை நடத்த வேண் டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;