tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று....  சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 3500-க்கும் மேல் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 3,965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,34,226  ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 69 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 3,591 பேர் கொரோனா சிகிச்சை வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 915 ஆக உள்ளது. 

மாவட்ட நிலவரம்
தமிழக கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 76 ஆயிரத்து 158 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து திருவள்ளூரில் 346 பேருக்கும், மதுரையில் 277 பேருக்கும், செங்கல்பட்டில் 237 பேருக்கும், தூத்துக்குடியில் 175 பேருக்கும், சேலத்தில் 136 பேருக்கும், வேலூரில் 135 பேருக்கும், திருச்சியில் 128 பேருக்கும், தேனி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 119 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 102 பேருக்கும், விருதுநகரில் 94 பேருக்கும்  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

;