tamilnadu

img

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் மதவெறியர்கள்...

சென்னை:
சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகளால் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்பட்ட சித்ரவதைகள், மனித உரிமை மீறல்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும்  பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் மதவெறியர்கள் சாத்தான்குளத்தில் நடத்திய அட்டூழியங்கள் குறித்தும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு புகார் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது,  மாநிலப் பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அனுப்பியுள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்  வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் காவலர்களால் கொடூரமாக தாக்கப் பட்டதனால் மரணமடைந்துள்ளனர். இந்த காவல் நிலைய படுகொலையை  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில்  இதுபோன்ற தாக்குதல்கள்  சமீபகாலத்தில்  அதிகமாக நடந்து வருவதாக  தெரிகிறது.  உயர் அதிகாரிகளுக்கும் இது சம்பந்தமான புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே இந்த தாக்குதலுக்கு பின்னால் இருக்கக்கூடிய காரணங்களை உரியமுறை யில் கண்டறிய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். 

பஞ்சாயத்து தலைவரையே அடித்துவிரட்டிய போலீஸ்
ஏனென்றால் இந்த குறிப்பிட்ட  சாத்தான்குளம்  காவல் நிலையதுணை ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஆய்வாளர் ஸ்ரீதர்  ஆகியோர் இணைந்து ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சிலரோடு சேர்ந்துகொண்டு ஒரு குறுகிய காலத்தில் 40க்கும் மேற்பட்டவர்களை இதுபோன்று கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். இவ்வாறுதாக்கப்பட்டு இருப்பவர்கள்  குறிப்பாக மதவழி சிறுபான்மை  மக்களாக இருக்கின்றனர்.கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ஜெபக்கூட்டம் நடத்திக்கொண்டிருந்த மதபோதகர் லாசர் பர்னபாஸ் உள்ளிட்ட பத்து கிறிஸ்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இதேபோன்ற ஒரு தாக்குதலை அவர்கள் நடத்தி இருக்கிறார்கள். இந்த தகவல் தெரிந்து அவர்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர்  காவல் நிலையத்திற்கு விசாரிப்பதற்கு வந்த போது காவல்துறையினர் அடித்து விரட்டியிருக்கிறார்கள்.ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவரிடமே காவல்துறை இவ்வாறு நடந்திருக்கிற அளவிற்கான தைரியத்தை இந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு யார் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிஇதன்மூலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 

மதபோதகர் உட்பட 10 பேர் மீது சித்ரவதை-தாக்குதல்
வணிகர்கள்  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை தாக்கியது போலவே இந்த  அப்பாவி மதபோதகர்களை தாக்கிவிரட்டி அடித்துள்ளனர். அன்று இரவு முழுவதும் வலி தாங்க முடியாமல் மறுநாள் காலையில்பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்ந்து ஒரு வார காலம் சிகிச்சை  பெற்றிருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி பகல் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கிவிட்டு மாலை நேரத்தில் இவர்களை மிரட்டி அனுப்பி வைத்திருக்கிறது. அன்றைக்கு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை ஆனால் மறுநாள்காலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்ததற்கு பிறகு இவர்கள்மீது பொய்யான வழக்குகள் புனையப் பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பிணை ஜாமீன் பெற்று வந்திருக்கின்றனர். ஜாமீனில் வெளிவந்தபின்பு பாதிக்கப்பட்ட லாசர் பர்னபாஸ்  நெல்லை சரக டிஐஜியிடம் புகார் மனு அளித்துள்ளார்.அதன் மீது அந்தப் பகுதி டிஎஸ்பி பாதிக்கப்பட்ட மத போதகர் லாசர் பர்னபாஸ்உள்ளிட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார்.

நடந்தஉண்மைகளை அவர்கள் கூறுகையில், தாங்கள் அமைதியாக  புளியங்குளம் பகுதியில் ஜெபக்கூட்டம் நடத்திக்கொண்டி ருந்த போது  காவல்துறை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்  தங்களை காவல்நிலையத்திற்கு வரச்சொல்லி அழைத்து வந்ததாகவும் காவல்நிலைய எல்லையிலேயே உதவி ஆய்வாளர் ரகுகணேஷ்முகத்தில் பலமாக தாக்கி காவல்நிலை யத்திற்குள் வைத்து 10 பேர்கள் மீதும்கையாலும், கட்டையாலும் கடுமையாக தாக்கி  குனிய வைத்து  பின்புறத்தில் தாக்குதல் நடத்தி  சித்ரவதை செய்ததையும், இது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தது மட்டுமில்லாமல்  காவல்நிலைய ஆய்வாளரும் வந்து தாக்கியதோடு, காவல்நிலை யத்தில் இருந்த பலரும் தங்களை தாக்கியதாகவும், அதனால் ஏற்பட்ட காயங்கள்அதற்கு எடுக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றிய விவரங்களை எல்லாம்  விளக்கமாக டிஎஸ்பி இடம் தெரிவித்திருக் கிறார்கள். ஆனால் அந்த விசாரணை மீதுஎந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இவர்கள் மீது இதுபோன்ற செயல்
களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டி ருந்தால் அதற்கு பின்பு ஏற்பட்ட மரணங்களும் துயரங்களும் தவிர்க்கப் பட்டிருக்கும்.

மதவாத சக்திகள் உறுதுணை
நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இதே அராஜக  உதவி ஆய்வாளர்களால்  ஜெயராஜ், அவருடைய மகன்பென்னிக்ஸ் படுகொலை செய்யப்பட்டி ருக்கிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த காவல் நிலையத்தில் இந்தபொறுப்பு அதிகாரிகளால் 40-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள் இதேபோன்று தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த காவல்நிலையஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையை சார்ந்த சார்ந்தவர்கள் திட்டமிட்டு குறிப்பிட்ட சிறுபான்மை மக்களை இவ்வாறு தாக்கி வந்திருக் கிறார்கள். இவர்களுக்கு உறுதுணை யாக ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற பெயரில் சில மதவாத சக்திகளும் இணைந்து கொண்டு இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக உறுதியாக தெரிகிறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய காவல் நிலையத்தில் மதரீதியான இதுபோன்ற பாகுபாடுகளும் தாக்குதல்களும் சட்ட வரம்புக்கு மீறிய செயலாகும்எனவே இந்த காவல் நிலையத்தில்  பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள், காவலர்கள்  மற்றும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீதும்,உரிய நேரத்தில்நடவடிக்கை எடுக்க தவறிய மாவட்டகாவல் அதிகாரிகள் மீதும்  விசாரணை யை உரிய முறையில் நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கேட்டுக்கொள்கிறது.

கொலை வழக்கு பதிவு செய்க!
சாத்தான்குளத்தில் காவல்துறை யினரால் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் படுகொலைக்கு காரணமான அனைத்து காவல்துறையினர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவும், பாதிக்கப்பட்ட அனைவரு க்கும் நீதியும் நியாயம் கிடைக்கச் செய்ய விசாரணை கமிஷன் அமைத்துநீதியை நிலைநாட்ட வேண்டும். இக்கொடுமைகளுக்கு காரணமான காவல்துறை யினர் மீது உரிய வழக்கு பதிவு செய்துநடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். 

;