tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியின் மலையாள நாளிதழ் ‘தேசாபிமானி’ கோவை செய்திப் பிரிவு துவக்கம்

கோயம்புத்தூர், ஜுலை 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலையாள நாளிதழான தேசாபிமானியின் கோவை செய்திப்பிரிவு ஞாயிறன்று துவக்கப்பட்டது.  கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக தேசாபி மானி திகழ்கிறது. கேரள மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள இந்நாளிதல் கேரள மாநிலத்தில் பத்து பதிப்புகள் கண்டு லட்சக்கணக் கான பிரதிகள் விற்பனையாகி வருகிறது.  இதன் அடுத்த கட்டமாக, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மலையாள மக்கள் வாழும் கோவை  மாவட்டத்தில்  தேசாபி மானியின் கோவை பதிப்பை துவக்க வேண்டும்  என்கிற நீண்டநாள் கோரிக்கை அம்மக்களிடையே இருந்து வந்தது. இதன் துவக்க முயற்சியாக கோவை செய்திப்பிரிவு கோவையில் ஞாயிறன்று துவக்கப்பட்டது.  முன்னதாக, காந்திபுரத்தில் தேசாபிமானி யின் கோவை செய்திப்பிரிவு அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து காந்திபுரம் சிஎம்எஸ் ஹாலில் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. தேசாபிமானியின் பொது மேலாளர் கே.ஜே.தாமஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செய்தி ஆசிரியர் எம்.சுரேந்திரன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை துவக்கிவைத்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார். ஆர்யவைத்திய பார்மசியின் இயக்குநர் பத்மஸ்ரீ.பி.ஆர்.கிருஷ்ண குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை யாற்றினார். தேசாபிமானி நாளிதழின் நோக்கம் குறித்து நாளிதழின் முதன்மை ஆசிரியரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.ராஜீவ் உரையாற்றினார்.  முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி தேசாபிமானியின் கோவை பகுதியின் சிறப்பிதழை வெளியிட்டார். சிஎம்எஸ் கல்லூரியின் தலைவர் எம்.பி.கோபால கிருஷ்ணன், கேரள கிளப்பின் தலைவர் கே.ஸ்ரீகுமரன், தீக்கதிர் நாளிதழின் கோவை பதிப்பு பொதுமேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், தேசாபிமானியின் வாசகர் வட்ட ஒருங்கிணைப் பாளர் சி.பிரபாகரன் ஆகியோர் வாழ்த்தி உரை யாற்றினர். முடிவில் கிளை மேலாளர் ஐ.பி.சைன் நன்றி கூறினார்.

;