tamilnadu

img

சென்னையில் 3ல் ஒருவருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி - ஆய்வில் தகவல்

சென்னையில் 3ல் ஒருவருக்கு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது
முன்னதாக சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நடத்தப்பட்ட செரோ ஸ்டடி  முதற்கட்ட ஆய்வில் 12,405 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2,673 பேர் அதாவது 21.5 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரிய வந்தது.

மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவு உள்ளது என்பதை கண்டறியவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செரோ ஸ்டடி எனும் ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறது. இந்த அடிப்படையில் 
சென்னையில் கொரோனா தொற்று பரவல் குறித்து இரண்டாவது கட்டமாக செரோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 6389 போரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 2062 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சூழலில் மேலும் 70 சதவிகிதம் பேருக்கு கொரோனா வருவதற்கான சாத்தியம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. 
ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது 3 முதல் 5 மாதங்கள் வரை மட்டுமே இருக்கும். ஆதலால், மீண்டும் பாதிக்கப்படலாம் என்று ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

;