tamilnadu

முதல்வருக்கு மனு.... 1ம் பக்கத் தொடர்ச்சி

செய்து, 120 தினங்களில் வழக்கை முடித்திட வேண்டும். சில வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக (கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், புதுக்கூரைப்பேட்டை முருகேசன், கண்ணகி தம்பதியினர் கொலை  வழக்கு) நடந்து வருவது குற்றவாளிகள்  தப்பிப்பதற்கே வழிவகை செய்யும்.  எஸ்.சி.,/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகள் 4(5)ன் படி பாதிக்கப்பட்டவர்கள் கோருகிற  வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்கவேண்டும்.

 தற்போது 6 சிறப்பு நீதிமன்றங்களே உள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும்.

 எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் படி மாநில காவல் இயக்குனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இணைந்து மாநிலத்தில் வன்கொடுமைகள் அதிகம் நடைபெறக்கூடிய பகுதிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த அறிக்கையை மாநில அரசிற்கு வழங்கிட வேண்டும்.

  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் (WP 26991ன் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் என்கிற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண் 460/2017) சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்ட அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அறிவித்திருக்கிற சிறப்பு பிரிவுகள் இயங்குவதை உறுதி செய்து சாதி மறுப்பு திருமணங்கள் மற்றும் தம்பதியர்க்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

 சாதியக் கொடுமைகளும், சாதிய ஒடுக்குமுறையும் தொடர்வது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, நாகரிக சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாகும். சாதிய உணர்வுகளை, வெறியைத் துடைத்தெறியும் வகையில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும்மேற்கொள்ள வேண்டும். துவக்கப்பள்ளி முதல் பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு பாடங்களை சேர்ப்பது, சாதிய வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் தொலைக்காட்சி விளம்பரங்கள், சமூகப் பிரச்சார இயக்கங்களுக்கு அரசு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

சமூக நீதி பாரம்பரியத்தை வலியுறுத்துகிற நாடகங்கள், கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசே நிதியுதவி செய்து நடத்திட வேண்டும்.

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கம் உள்ளிட்ட மக்கள்அமைப்புகள் தீண்டாமை மற்றும் சாதிய கொடுமைகளை எதிர்த்து குரலெழுப்ப வேண்டுமென உறுதிமொழி ஏற்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.

உறுதியான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் பட்டியலின பழங்குடி மக்கள் கையில் நிலம் கிடைப்பத ற்கான உறுதியான நடவடிக்கைகளையும் குறிப்பாக பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தி சாதிய ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

;