tamilnadu

img

பொதுமக்கள் புகார் அளிக்க தம்மை வீடியோ காலில் அழைக்கலாம்: சென்னை காவல் ஆணையர்

சென்னை:
பொதுமக்கள் கொரோனா காலத்தில் தங்கள் புகாரை காவல் ஆணையரிடம் நேரடியாகத் தெரிவிக்க இயலாத நிலையில், வீடியோ காலில் காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்க வாரத்தில் 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சென்னை காவல் ஆணையராக 3 ஆண்டுகள் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன் கடந்த 1-ம் தேதி மாற்றப்பட்டார். புதிய காவல் ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற் பின்போது அளித்த பேட்டியில், பொதுமக்கள் சந்திக்க வராத நிலையில் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வீடியோ காலில் பேச ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

“சென்னை பெருநகரில் கொரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளைக் காவல் ஆணையாளரை நேரடியாகச் சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில், சென்னைபெருநகர காவல் ஆணையாளரை 6369 100 100 என்ற கட் செவி (Whats App) எண்ணில் காணொலி மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை புகார் தெரிவித்துப் பயனடையலாம்.அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூலை 3)  மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மேற்கண்ட கட்செவி எண்ணில் காணொலி மூலம் காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பொதுமக்கள் காணொலி மூலம் புகார் தெரிவித்துப் பயனடையும் படி சென்னை பெருநகர காவல் துறை சார்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது”.இவ்வாறு காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

;