tamilnadu

img

சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து: அதிகாரிகள் நிதி கையாடல்

சென்னை:
சிறப்பு ஒலிம்பிக் பாரத் இயக்குநர் மற்றும் ஆசிய பசிபிக் சிறப்பு ஒலிம்பிக் மேலாளர் மீதான புகார் குறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மேற் பார்வையில் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 3ஆம் தேதி முதல் சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதனை நடத் தும் சிறப்பு ஒலிம்பிக் பாரத் அமைப்பின் தமிழக இயக்குநர் பால் தேவசகாயம், ஆசிய பசிபிக் சிறப்பு ஒலிம்பிக் மேலாளர் ஜான் நாகராஜன் ஆகியோர் நிதி கையாடல் செய்ததாகவும், வீரர் களை தேர்வு செய்ததில் வெளிப்படை தன்மை இல்லை எனவும் மனோ ரஞ்சனி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நேரில் ஆஜராகாத பால் தேவசகாயத்திற்கும், ஜான் நாகராஜனுக்கும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரும் நேரில் ஆஜராகி, சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், தங்களுக்கு எதிராக எந்த புகாரும் இல்லை எனவும் தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கத் தலைவர் தேவாரம் இந்த போட்டிகளில் முறைகேடு நடந்துள்ளதாக சிறப்பு ஒலிம்பிக் பாரத்துக்கு புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.இதனையடுத்து பேசிய நீதிபதிகள், இந்த புகார் குறித்து ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வால்டர் தேவாரத்தின் மேற்பார் வையில் விசாரணை நடத்தி 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், சிறப்பு ஒலிம்பிக் பாரத் அமைப்பின் நிதி குறித்த விவரங்களையும், வீரர்கள் தேர்வு செய்யபின்பற்றப்படும் விதிமுறைகளையும், அமைப்பின் சட்டத்திட்டங் களையும் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

;