tamilnadu

img

கொரோனா பரவலை கண்டறிய தமிழக அரசு புதிய ஆய்வுக்கு திட்டம்

சென்னை:
நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கொரோனா பரவலின் நிலையை கண்டறிய, 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் பொதுமக்களிடம் ஐ.சி.எம்.ஆர். ஆய்வு நடத்தியது. பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை அறியும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த ஆய்வில் 21.5 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய அளவில் இரண்டாவது ஆய்வை ஐ.சி.எம்.ஆர். செப்டம்பர் 20 ஆம் தேதி நடத்தி முடித்தது. இந்நிலையில் தமிழக அரசு இதுபோன்ற ஆய்வை ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.

இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 30 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்த சுகாதாரத்துறைமுடிவு செய்துள்ளது. இந்த சோதனையின் முடிவில் ஒருவரின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அளவு கண்டறியப்பட்டு அதன் மூலம் கொரோனா பாதிப்பின் நிலைமை கண்டறியப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் ஆய்வு தொடங்கப்பட்டு, அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;