tamilnadu

கேரளத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் கோவிட் பரவல் அதிகரிப்பு

திருவனந்தபுரம்:
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக, கேரளத்தில் 6,000 க்கும் மேற்பட்டோர் கோவிட்டில் பாதிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகளை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோரால் பலர் நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவின்றனர்.
வெள்ளியன்று 6477 பேர் நோய்வாய்ப்பட்டனர். இதில் 6131 பேருக்கு தொடர்புமூலம் நோய் தொற்றியது. 713 க்கான தொடர்புஆதாரம் தெளிவாக இல்லை. 3481 பேர் குணமடைந்தனர். புதிய நோயாளிகளில் 80 சுகாதார ஊழியர்கள் உள்ளனர். 58 பேர் வெளிநாட்டிலிருந்தும், 198 பேர் பிற மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். மேலும் 22 கோவிட்இறப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த இறப்பு635 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளியன்று காலை வரையிலான 24 மணி நேரத்திற்குள் 56,057 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

பனூரில் லீக் ஊழியர்களுக்கு கோவிட்
பாலத்தாயி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பெரிங்கத்தூரில் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்திருந்த கும்பல் போராட்டத்தில் பங்கேற்ற 6 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. இந்த போராட்டம் மூன்று நாட்கள் நீடித்தது. பனூர் மாநகராட்சியின் லீக் பொதுச் செயலாளர் உட்பட5 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரிங்கதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் 25 குடும்பங்களில் வெள்ளியன்று கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதில் இரண்டு வயது குழந்தை முதல்60 வயது முதியோர் வரை உள்ளனர். ஒருதனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முந்தைய நாள் நோயை உறுதிப்படுத்திய யூத் லீக் தலைவர் போராட்டம் முழுவதும் பங்கேற்றதைத் தொடர்ந்தே இந்த நோய்பரவுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.திருச்சூரில் அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு எதிரான வன்முறை போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கேஎஸ்யு திருச்சூர் மாவட்ட செயலாளர் வி.எஸ். டேவிட்டுக்கும் கோவிட்  தொற்றியுள்ளது. கடந்த வாரம் உம்மன் சாண்டி ராம நிலையத்திற்கு வந்தபோது, டேவிட் அவரை சால்வை அணிவித்துவரவேற்றார். வேறு பல போராட்டங்களிலும் அவர் பங்கேற்றுள்ளார்.திருச்சூர் கிழக்கு கோட்டை வழியாகஅமைச்சர் ஜலீல் சென்று கொண்டிருந்தபோது, டேவிட் உள்ளிட்ட ஊழியர்கள் காருக்குமுன்னால் குதிக்க முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தபோது முகமூடிகூட அணியாமல் மோதினர். அவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு அகற்றப்பட்டனர். திருவனந்தபுரம் போராட்டத்திற்கும் டேவிட் வந்திருந்தார்.வியாழனன்று கேபிசிசி செயலாளர் ஜான்டேனியலிடமும் கோவிட் உறுதி செய்யப்பட்டது. ஒல்லூர் தொகுதியில் நடந்த காங்கிரஸ் போராட்டங்களல் கூட்டமாக பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உட்பட பத்து பேரிடம் கோவிட்கண்டறியப்பட்டது. எம்.பி. வின்சென்ட் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பதவியேற்ற விழாவில் கலந்து கொண்டவர்களிடமும் கோவிட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

;