tamilnadu

img

மதுரையில் ஊரடங்கு எதிரொலி : காய்கறிகள் விலை “கிடுகிடு” உயர்வு

மதுரை:
கொரோனா பரவலால் மதுரை மாநகராட்சி மதுரை புறநகரைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு அமைச்சர்களின் வாக்குறுதியை மீறிபோதிய காலஅவகாசம் இன்றி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மதுரையில் காய்கறி விலைகள்  “கிடுகிடு” வென உயர்ந்தது. கடந்த இரண்டு தினங்களாக ரூ.20 முதல் 30 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி சந்தையில் ரூ.60-க்கும் கடைகளில் ரூ.80-க்கும் விற்பனையானது.  பெரிய வெங்காயம் கிலோ ரூ.20- க்கு விற்றது ரூ.30 உயர்ந்து  ரூ.50- க்கு விற்பனையானது. சின்ன வெங்காயம் மூன்று கிலோ நூறு ரூபாய்  விற்றது. திடீர் முடக்கத்தால் அது ஒரு கிலோ ரூ. 70-க்கு விற்பனையானது. இதர காய்கறிகளின் விலையும் ஒரே நாளில் உயர்த்தப்பட்டது. 

;