tamilnadu

img

மதுரையில் பிரதமர் மோடியின் கிசான் திட்டத்தில் மோசடி?

மதுரை:
பிரதமர் மோடியின் கிசான் திட்டமோசடியில் மதுரை மாவட்டமும் தப்பவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் சிறு-குறு விவசாயிகளுக்கு  வருடத்திற்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.  மேலூர் தாலுகாவில் உள்ள சுண்ணாம்பூர், கீரனூர், துவரங்குளம் கிராமத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சுண்ணாம்பூரில் வசிக்கும் வீரபாண்டி மகன் இளையராஜா தமிழக முதல்வர், ஊழல் கண் காணிப்பு தடுப்புப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதை பத்திரிகைகளுக்கும் சனிக்கிழமை அனுப்பிவைத்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு ஊழியர்கள், ராணுவத்தில் பணியாற்றுவோர் மற்றும் நிலமே இல்லாதவர்கள் 167 பேருக்கு முறைகேடாக பணம் வழங்கப்பட்டுள்ளது. கிட்டத் தட்ட ரூ.10 லட்சம் அளவிற்கு மோசடிநடைபெற்றுள்ளது. 

மேலும் வேளாண்துறை மூலம்கிடைக்கப்பெற்றுள்ள பயனாளிகள்பட்டியலை ஆய்வு செய்ததில் 167பேரில் 96 பேர் சுண்ணாம்பூரை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 71 பேர் துவரங் குளம், கீரனூரைச் சேர்ந்தவர்கள் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், வேளாண்துறை அதிகாரி பயனாளிகள் பட்டியலை ஆய்வு செய்ய வந்தார்.அப்போது அவரிடம் விவசாயிகள் பட்டியல் வேண்டுமென வேண்டிக் கேட்டுள்ளனர். அவர்கள் அளித்த பட்டி
யலின் அடிப்படையிலேயே இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது. உண்மையான பயனாளிகள் பட்டியலே அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும். போலி பயனாளிகள் பெயர் இணையதளத்தில் இருக் காது என்றார். மோசடி குறித்த முழுமையான தகவல்களை வெளிக் கொண்டுவரவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்றார்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் என்.பழனிசாமி கூறுகையில், மேலூர் தாலுகாவில் வெளியாகியுள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டு மதுரை மாவட்டம் முழுவதும் பட்டியலை ஆய்வு செய்யவேண்டும். மோசடிநடைபெற்றிருப்பது உண்மையெனதெரியவந்தால் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றார். புகார் மனு அனுப்பிய இளையராஜாவை சனிக்கிழமை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “சில நாட்களுக்கு முன்பு வேளாண் உதவி இயக்குநர் (ADA)செல்வி என்ற அதிகாரி  எங்கள் கிராமத்திற்கு வந்தார். அப்போது நாங்கள் அங்கிருந்தோம்.  அவர் பட்டியலை காண்பித்து இவர்களை தெரியுமா எனக் கேட்டார். தெரியும் என்றோம். இவர்களிடம் “புரூப்” கேட்டால்தர மறுக்கிறார்கள் என்றார். நாங்கள் அவரிடமிருந்த பட்டியலின் ஒரு நகலை வாங்கி ஆய்வு செய்தபோது அவர்கள் உண்மையான பயனாளிகள் இல்லை என்பதை அறியமுடிந் தது என்றார்.பிரதமர் மோடியின் பி.எம் கிசான் இணையதளத்தை சனிக்கிழமை மாலை ஆய்வு செய்தபோது கீரனூர்ஊராட்சியில் 277 பேர் பயனாளிகளாக உள்ளனர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

===நமது சிறப்பு நிருபர்===

;