tamilnadu

img

மாற்றுத்திறனாளிக்கு ரூ.1000: ஆட்சியர்

மதுரை:
மதுரை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படுமென ஆட்சியர் வினய்கூறியுள்ளார்: கொரோனா ஊரடங்கில்ஏழைகளுக்கு பல்வேறு நிவாரணங் களை அரசு வழங்குகிறது. ஜூன்  வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000நிவாரணம் வழங்கவும் அரசு உத்தரவிட்டது. நிவாரணம் 46,627 பேருக்கு வழங்கரூ.4,66,27,000 பெறப்பட்டுள்ளது. அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை காண்பித்து மாற்றுத்திறனாளிகள் நிவாரணம் பெறலாம். நிவாரணத்தை இரண்டு ரூ.500 நோட்டுகளாக வழங்க வேண்டும். ஜூன் 29-ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று நேரில் நிவாரணத்தொகை வழங்கப்படும். நிவாரணம் பெறுவதில் சிரமம் இருந்தால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அலுவலகத்தை 0452-252 9695ல்தொடர்பு கொள்ளலாம். நிவாரணம் பெறாதவர்கள் 1800 452 50111ல் தொடர்பு கொள்ளலாம். அரசு போதிய நிதி ஒதுக்கியுள்ளதால் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

;