tamilnadu

img

மணல் கடத்தல்.... சிவகங்கை ஆட்சியருக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
சிவகங்கை மாவட்டத்தில் சட்டவிரோதமாக சரளை மண் கடத்தலை தடுக்க தடை விதிக்க கோரிய வழக்கில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்துஉரிய ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த திருச்செல் வம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ரோட்டில் உள்ள விஜயாபுரம், செங்கார்கோவில் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள செம்மண் என்றழைக்கப்படும் சரளை மண் அதிகளவில் உள்ளது.இதனை எங்கள் பகுதியில் உள்ள பலர் அரசின் எவ்வித அனுமதியும் பெறாமல் குளம், கண்மாய், நீர் ஆதாரங்கள் இருக்கும் இடங்களில்திருட்டுத்தனமாக அள்ளி வியாபாரம் செய்து வருகின்றனர்.

இவர்கள் அளவுக்கதிகமாக இவற்றை அள்ளி விற்பனை செய்து வருவதால், விவசாய நிலங்கள் பாதிப்படைவதுடன், எங்கள் பகுதியில் உள்ளசிறிய கண்மாய், குளங்கள் போன்ற நீராதாரங்களிலும் தண்ணீர் வற்றத் தொடங்கியுள்ளன. இதனால் எங்கள்பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், குடிக்கும் குடிநீருக்கும் சிரமப் படும் நிலை உள்ளது.இது குறித்து எங்கள் பகுதியில் உள்ள, வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதியில், மண் அள்ளுவதற்கு தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்புதிங்களன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் நீர்நிலைகளில் அதிக அளவில் மண் எடுப்பதை தடுக்கதடை செய்து உத்தரவிட வேண்டும் எனகூறப்பட்டது.

அரசு தரப்பில் கூறும்போது காரைக்குடி முதல் இராமநாதபுரம் வரையிலான சாலை அமைப்பதற்கு மணல்எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளது எனக் குறிப்பிட்டார்.இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் சாலை அமைக்கும் பணிக்குயார் அனுமதி கொடுத்தது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “நெடுஞ்சாலை பணிக்கு தவிர சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுகிறதா? என்பதைகண்காணிக்க வேண்டும். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் புகைப்படத்துடன் கூடிய நிலைஅறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுவழக்கை முடித்து வைத்தார்.

;