tamilnadu

img

சாத்தான்குளம் படுகொலை  5 காவலர்களுக்கு 3 நாள் சிபிஐ காவல்

மதுரை:
சாத்தான்குளத்தில் சித்திரவதை செய்து வியாபாரிகளை கொலை செய்த காவல்துறையினரை மூன்று நாள் காவலில் எடுத்து  சிபிஐவிசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பால கிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய ஐந்து பேரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி சிபிஐ சார்பில் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை திங்களன்று விசாரித்த நீதிபதி ஹேமந்தகுமார் ஐந்துபேரையும் செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். செவ்வாயன்று ஆஜர்படுத்தப்பட்ட ஐந்து பேரையும் விசாரித்த நீதிபதி ஹேமந்தகுமார், ஐந்து பேரையும் சிபிஐ காவல்துறையினர் மூன்று நாள் காவலில் எடுத்து (வியாழக்கிழமை) விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். இதையடுத்து ஐந்து பேரும் உடனடியாக மதுரை சொக்கிக்குளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து, ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட ஐந்து பேரிடமும் சிபிஐ விசாரணையை தொடங்கியது.

;