india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்

மியான்மரில் ராணுவ அதிகாரிகளால் சிறைவைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி உள்ளிட்டதலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். 

                                      *******************

2019 இறுதியில் சீனாவில் கோவிட் தொற்று முதன்முதலாக கண்டறியப்பட்ட ஹூபெய் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளுக்கு திங்களன்று உலக சுகாதார அமைப்பின் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். 

                                      *******************

பணியிடங்களில் கோவிட் பரவக்கூடும் என்றஅச்சத்துடன் தொடர்ந்து வீட்டிலேயே இருக்கும் தொழிலாளர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். 

                                      *******************

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இது உலகம் முழுவதிலும் வெள்ளி விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

                                      *******************

ஆப்கானிஸ்தானத்திலிருந்து 2021 ஏப்ரல்இறுதியில், ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்டபடி முழுமையாக படைகள் வாபஸ் பெறப்படாது என நேட்டோ அறிவித்துள்ளது. 

;