img

மும்பை விமான நிலையமும் அதானி கட்டுப்பாட்டில் போனது.... ஜிவிகே குழுமத்திடம் 74 சதவிகித பங்குகளை வாங்கியது

மும்பை:
மும்பை விமான நிலைய பராமரிப்பு நிறுவனத்தின் 74 சதவிகித பங்குகளை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.

இதுதொடர்பான ஒப்பந்தத்தில், மும்பை விமான நிலையப் பராமரிப்பை இதுவரை கையில் வைத்திருந்த ஜிவிகே குழுமத்துடன், அதானிகுழுமம் திங்களன்று கையெழுத்திட் டுள்ளது.மும்பை சர்வதேச விமான நிலையத்தை நிர்வகித்து வரும் ஜிவிகே குழுமத்திடம் இருந்து 50.5 சதவிகித பங்குகளையும், தென் ஆப்பிரிக்க ஏர்போர்ட் கம்பெனியிடம் 10 சதவிகித பங்குகளையும், தென் ஆப்பிரிக்க பிட்வெஸ்ட் நிறுவனத்திடம் 13.5 சதவிகிதப் பங்குகளையும் அதானிகுழுமம் வாங்கியுள்ளது.இதன்மூலம் 26 சதவிகித பங்குகள்இந்திய விமான நிலைய ஆணையத் தின் (ஏஏஐ) வசம் இருந்தாலும், ஒட்டுமொத்த மும்பை விமான நிலையமும் அதானி குழுமத்தின் கட்டுப் பாட்டிற்கு சென்றுள்ளது.

ஏற்கெனவே ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம், அகமதாபாத், லக்னோ மற்றும் மங்களூரு ஆகிய 6 விமான நிலையங்களின் ஏலத்திலும்அதானி நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. புதிதாக வரவுள்ள நவிமும்பை விமான நிலையத்தையும் அதானி குழுமமே கைப்பற்ற உள் ளது.இதன்மூலம் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமான நிலைய நிர்வகிப்பு நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது.

;