img

எம்.பி.க்கள் தொகுதி நிதிப் பறிப்பை ஏற்கவே முடியாது... நடிகை நவ்நீத் கவுர் எம்.பி. கண்டனம்

மும்பை:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்துள்ள, மத்திய பாஜக அரசின்செயலுக்கு நடிகையும், மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி மக்களவைத் தொகுதி சுயேட்சை எம்.பி.யுமான நவ்நீத் கவுர் எதிர்ப்பு தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

‘’நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை, மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்திருப்பதன் மூலம் தொகுதியில் எந்தவொரு வளர்ச்சிப் பணிகளையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு எம்.பி. என்ற முறையில் என்னிடம் இருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்காத போது என்னால் என்ன நன்மை செய்ய முடியும்? எனவேதான், தொகுதி நிதி ரத்துக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறேன்.நாடாளுமன்ற உறுப்பினர்களுக் கான ஊதியப் பிடித்தத்தால் பெரியபாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை. ஆனால் மக்களுக்கு சென்றுசேர வேண்டிய நிதியை ரத்து செய்திருப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவிலேயே அரசியல் கட்சிகளில் இணையாமல் சுயேச்சை யாக போட்டியிட்டு எம்.பி., எம்எல்ஏ-வாக உள்ள ஒரே தம்பதி நானும், எனது கணவரும் மட்டும்தான். எனவே, எனது கோரிக்கை அரசியலுக்கு அப்பாற்பட்டது. இவ்வாறு நவ்நீத் கவுர் எம்.பி. கூறியுள்ளார்.

;