articles

img

வாழ்வாதாரமா? மதமா? - அ.அன்வர் உசேன்

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டு கட்டங்கள் 188 தொகுதிகளுக்கு முடிந்து 95 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளன. முதல் இரண்டு கட்டங்களிலும் பாஜகவிற்கு பின்ன டைவு ஏற்பட்டுள்ளதை பல ஆய்வாளர்கள் உறு திப்படுத்தியுள்ளனர். இந்த உண்மை பாஜகவுக்கும் தெரியும். எனவே மத உணர்வுகளை கிளப்பிவிடுவது எனும் தன்னிடமுள்ள துருப்பு சீட்டை தீவீரமாகவும் மூர்க்கத்தனமாகவும் பயன்படுத்த பாஜக முனைந்துள்ளது. எனினும் இது பாஜகவுக்கு முழுப் பலனையும் அளிக்கப்போவது இல்லை என்பதே கள நிலவரம். 

இந்துத்துவா வாக்கு வங்கி

இந்த தேர்தல் அசாதாரணமான ஒன்றாக இல்லா மல் வழக்கமான ஒன்றாக இதுவரை நடந்துள்ளது என சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அசாதா ரணமானது என அவர்கள் குறிப்பிடுவது 2019ல் நடந்தது போல புல்வாமா – பாலக்கோடு தாக்குதல்களும் அதன் அடிப்படையில் அதீத தேசிய வெறி மற்றும் மத உணர்வுகள் கிளப்பிவிடப்பட்டது போல ஒரு அசாதா ரண சூழல் இல்லை. வழக்கமான தேர்தல் என்பதன் பொருள், மக்கள் தமது வாழ்வாதார பிரச்சனைகள் அடிப்படையில் இந்த தேர்தலை அணுகும் சூழல் உள்ளது என்பதாகும். எனினும் வழக்கமான சூழலில் தேர்தல்கள் எனில் தனக்கு அது பயன்படாது என பாஜக எண்ணுகிறது. எனவே எத்தகைய அசாதா ரண தன்மையை திணிக்க மோடியும் பாஜகவும் எத்த னிக்கின்றன என்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நீண்ட கால பிரச்சார மும் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியும் ஒரு இந்துத்துவா வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளது என்பதை குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்த இந்துத் துவா வாக்கு வங்கி ஒப்பீட்டளவில் குறைவான சத வீதம் என்றாலும் கணிசமாக உள்ளது. அதுதான் பாஜகவின் அடித்தளமாக உள்ளது. எந்த சூழ்நிலை யிலும் இந்த வாக்கு வங்கி தடம் மாறுவது இல்லை. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் இதனை வெளிப்படுத்தியது. 2023 டிசம்பரில் நடந்த 5 சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் இதனை மேலும் உறுதிப் படுத்தின. அனைத்து மதிப்பீடுகளுக்கும் மாறாக ராஜஸ்தான்/மத்தியப் பிரதேசம்/சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வென்றது. இது பற்றி இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த CPI(M) மத்திய குழு தனது தீர்மானத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது: “………….. பாஜக இத்தகைய வெற்றி பதிவு செய்த தற்கு மையமான பிரச்சனை இந்துத்துவா வாக்கு வங்கி வலுப்பெற்றது என்பதாகும்.” இந்த இந்துத்துவா வாக்கு வங்கியை மூன்று கட்டத் தேர்தல் நடந்துள்ள நிலையில், தக்க வைக்க சங் பரிவாரம் கடுமையாக முயற்சிகளை எடுத்து வருகிறது.

வாழ்வாதார பிரச்சனைகளை  மையப்படுத்திய ‘இந்தியா’ அணி!

2024 தேர்தல்கள் தொடங்கிய பொழுது இந்துத்துவா வாக்கு வங்கியும் வளர்ச்சி பற்றிய -தான் உருவாக்கி வைத்துள்ள பொய்யான பிம்பமும் 2047/ 2100 என நீண்ட கால கனவு பற்றிய மாயைகளும் மக்கள் மனதை வென்றுவிடும் என மோடி நினைத் தார். ராமர் கோவில் தொடக்க விழாவும் அதில், தான் முதன்மை பூசாரி போல செயல்பட்டதும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்துவிடுவோம் என மோடியும் பாஜகவினரும் மனப்பால் குடித்தனர். ஆனால் கள நிலவரம் அதற்கு மாறாக இருந்து வருகிறது. மோடி ஆதரவு மற்றும் அரசியல் சார்பற்ற இருவகை ஆய்வு களும் விலைவாசி/ வேலையின்மை/ அதீத பொரு ளாதார அசமத்துவம் ஆகியவை மக்கள் மனதில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது என்பதை மிகத்தெளிவாக படம்பிடித்து காட்டின. மோடிக்கு பெரும் ஏமாற்றமாக ராமர் கோவில் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. கள நிலவரத்தை பிரதிபலிக்கும் வகையில் ‘இந்தியா’  அணியின் கட்சிகள் தமது தேர்தல் பிரச்சார வியூகங்க ளை அமைத்தனர். ஒவ்வொரு மாநிலத்திலும் தனித் தன்மையுடன் இந்த வியூகம் அமைந்தது. ‘இந்தியா’ அணியின் அங்கமாக உள்ள கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மக்களிடையே பெரும் தாக்கத்தை உரு வாக்கின. பாஜகவின் தாராளமய நாசகர கொள்கை களையும் இந்துத்துவாவின் அழிவுபூர்வமான விளைவு களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏனைய இடதுசாரி கட்சிகள் வலுவாக அம்பலப்படுத்தி மாற்றுத் திட்டத்தை முன்வைத்தன. அத்தகைய மாற்று திட்டங்கள் மூலம் எவ்வாறு ஒரு மாநில அரசாங்கம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை கேரளா அனுபவம் மூலம் இடதுசாரி கட்சிகள் செய்து காட்டின. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அணி பாஜக- அதிமுகவுக்கு எதிராக வலுவான களத்தை  அமைத்தது. 

பாஜகவிற்கு காத்திருக்கும் பூஜ்யங்கள்

பீகாரில் நிதீஷ் குமாரை தம் பக்கம் இழுத்த பின்னரும் பாஜகவால் வெற்றியை சுவாசிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. பீகாரில் உருவாகி யுள்ள ராஷ்டிரிய  ஜனதா தளத்தின் தலைமையிலான இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் அடங்கிய கூட்டணி ‘வேலையின்மையை மையமாக வைத்து நடத்தும் ஊக்கமிக்க பிரச்சாரம் பாஜகவை பின்னுக்கு தள்ளி யுள்ளது. சென்ற தேர்தலில் பீகாரில் 40ல் 39 தொகுதி களில் பாஜக கூட்டணி வென்றது. இந்தமுறை சரிவு நிச்சயம் என்பதே பீகார் சூழல். தனது இழப்பை சரிகட்ட மகாராஷ்டிராவில் சிவசேனாவையும் தேசிய வாத காங்கிரசையும் பாஜக உடைத்தது. காங்கிரசி லிருந்து முன்னாள் முதல்வர் உட்பட பலரை இழுத்தது. ஆனால் இவை எதுவும் பாஜகவுக்கு பலன் அளிக்கப்போவது இல்லை. மாறாக இவை யெல்லாம் பாஜகவின் வாஷிங் மெஷினுக்கு சிறந்த உதாரணங்களாக அமைந்தன. சென்றமுறை 48ல் 41 தொகுதிகளில் பாஜக கூட்டணி வென்றது. இந்த முறை  கணிசமான தொகுதிகள் சரியும் என்பதே நிலை.  பஞ்சாப்பில் பாஜகவுடன் சேர அகாலிதளமும் விரும்பவில்லை. “இன்று முஸ்லீம்களுக்கு என்ன நடக்கிறதோ அது நாளை சீக்கியர்களுக்கு நடக்காது என்று எந்த உத்தரவாதமும் இல்லை” எனும் அகாலி தளத்தின் கூற்று பஞ்சாப்பின் கவலையை வெளிப் படுத்துகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயி களின் கோபம் பாஜகவுக்கு எதிராக இன்னும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ளது. முற்றிலும் தனிமைப்பட்டுள்ள பாஜகவுக்கு பஞ்சாப்பிலும் பூஜ்யம் காத்து கொண்டுள்ளது. ஹரியானாவிலும் சரிவு நிச்சயம்! உத்தரப்பிரதேசத்தில் சென்றமுறை வென்ற  65 தொகுதிகளை தக்க வைப்பதற்கே பெரும் போராட் டத்தை பாஜக நடத்த வேண்டியுள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜக எவ்வித முன்னேற்றத்தையும் சாதிக்கப் போவது இல்லை. ஹேமந்த் சோரனின் கைது ஜார்கண்டிலும் அரவிந்த் கெஜிர்வால் கைது தில்லியிலும் பாஜகவிற்கு சாதகத்தை அல்ல; பாத கத்தை விளைவித்துள்ளது.  காங்கிரசின் தேர்தல் அறிக்கையும் மக்களிடையே தாக்கத்தை உருவாக்கியுள்ளது. சில ஊடகங்கள் சொல்வது போல காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் எவ்வித தீவிர மாற்று பொருளாதார திட்டங்களும் இல்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு பின்னர் சாதா ரண மக்களின் மனதில் இடம்பிடிக்கும் வகையில் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வேலையின்மை யைப் போக்குவது/ஏழை பெண்களுக்கு வாழ்வாதார உரிமை/ அக்னிவீர் திட்டம் ரத்து/ சாதிவாரி கணக் கெடுப்பு ஆகியவை குறித்து காங்கிரசின் அறிக்கை உறுதிபட பேசுகிறது. அது தாக்கத்தையும் உருவாக்கி யுள்ளது. 

மோடி செல்வாக்கின் முடிவு தேதி

ஒட்டு மொத்தமாக இந்தியா அணி 2024 தேர்த லின் மையமான அம்சம் வாழ்வாதார பிரச்சனை கள்தான் என்பதை நிலைநாட்டியுள்ளது. கள ஆய்வாள ரும் விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய தலைவர்க ளில் ஒருவருமான யோகேந்திர யாதவ் தாம் ஆய்வு  மேற்கண்ட சில சாதாரண மனிதர்களின் உணர்வுகளை கூறுகிறார். அவரிடம் ஒரு சாதாரண கிராம மனிதர் சொன்னது: “ஒவ்வொரு பொருளுக்கும் முடிவு தேதி உண்டு.  மருந்துகளுக்கு முடிவு தேதி உண்டு. கொரோனோ வுக்கும் முடிவு தேதி இருந்தது. அதே போல மோடிஜி யின் செல்வாக்கிற்கும் முடிவு தேதி நெருங்கி வருகிறது” கிழக்கு ராஜஸ்தானில் இன்னொரு கிராம வாசியிடம் நடந்த உரையாடல்:

“உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
இல்லை. மோசம்தான் ஆகியுள்ளது.
உங்கள் குடும்பத்தினர் வாழ்வு நிலை?
எனக்கு மோசம் எனில் குடும்பத்துக்கும் மோசம்தானே!
உங்கள் நண்பர்கள்?
அவர்களின் நிலையும் மோசம்தான்!
உங்கள் கிராமத்தின் நிலை?
அதுவும் மோசம்தான்!
இந்த நிலைக்கு யார் காரணம்?
வேறு யார்! பா.ஜ.கதான்!

அப்படியெனில் நீங்கள் யாரும் பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டீர்களா? சில பாஜக விரும்பிகளும் வசதி படைத்தவர்க ளும் தவிர வேறு யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். “ 2019ல் மோடியை விமர்சித்தால் கோபம் கொண்ட ஒரு பகுதியினர், இந்தமுறை அவர்களே மோடியை விமர்சிக்கும் சூழலில் உள்ளனர். இத்தகைய கள நிலவரம் தனக்கு சாதகமாக இல்லை என்பதை பாஜக உணர்ந்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் - சிபிஎம் ஆதிவாசி கட்சியின் ஒற்றுமை பாஜக விற்கு பின்னடைவை உருவாக்கியுள்ளது. சென்ற தேர்தல்களில் ராஜஸ்தானில் அனைத்து 25 தொகுதி களையும் பாஜக கைப்பற்றியது. ஆனால் இந்த முறை அது சாத்தியமல்ல. அதே போல கர்நாடகா வில் 28ல் 25 தொகுதிகளை பாஜக வென்றது. இந்த முறை கணிசமான சரிவு ஏற்படும். பிரஜ்வால் ரேவண்ணா பிரச்சனை கர்நாடகத்தில் மேலும் பாஜகவிற்கு பின்னடைவை உறுதிப்படுத்தியுள்ளது. 

எனவேதான் தேர்தலின் பேசு பொருளாக, வாழ்வாதார பிரச்சனைகள் என்பதை மத உணர்வாக மாற்ற கடும் முயற்சிகளை பாஜகவும் மோடியும் செய்து வருகின்றனர். இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களை நிறுத்துவதன் மூலம் இந்துக்களி டையே உள்ள சாதிய வேற்றுமைகளை மூடி மறைக்க பாஜக முயல்கிறது.  இந்தியா அணி வலுவாக சாதிவாரி கணக்கெடுப்பை முன்மொழிய; பா.ஜ.க அந்த திட்டத்தை சிதைக்க எத்தனிக்கிறது. அந்த திட்டம் என்பதே இந்துக்களின் சொத்துக்களையும் இடஒதுக்கீடு நன்மைகளையும் முஸ்லீம்களுக்கு தாரைவார்க்க என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்தியா அணி தென் பகுதியை பிரித்து தேசத்தை துண்டாட முயல்கின்றனர் எனவும் பீதியை கிளப்ப மோடி முயல்கிறார். இந்தியா அணியின் கட்சிகள் வசதிபடைத்த 10% பேருக்கு மாற்றாக 90% மக்களின் வாழ்வு நிலையை முன்னேற்ற பேசுகின்றனர். பாஜகவோ 14% முஸ்லீம்க ளுக்கு எதிராக 80% இந்துக்களை முன்நிறுத்த பேசு கிறது. வேலையின்மை/ விலைவாசி/ கூட்டாட்சி தத்து வம் என இந்தியா அணி பேசுகிறது. பாஜகவோ இந்துத்துவா/ மோடி துதிபாடல்/ தொலைதூர சாத்திய மற்ற கனவுகள் பற்றி பேசுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்க இந்தியா அணி விரும்புகிறது. பாஜக ஒருமுகத்தன்மை கொண்ட இந்தியா உருவாக்க முயல்கிறது.  பாஜகவின் பிரச்சாரங்கள் மக்களிடம் இதுவரை பெரிதாக எடுபடவில்லை. இதுவே பாஜகவையும் மோடியையும் மேலும் மேலும் மதப் பிளவு வாதங்க ளை கைக்கொள்ள துரத்துகின்றன. பாஜகவினர் தமது வெற்றிக்காக எத்தகைய செயல்களையும் அரங்கேற்ற தயங்க மாட்டார்கள் என்பதை புல்வாமா- பாலக்கோடு போன்ற கடந்த கால அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன. இவற்றை மீறி மீதமுள்ள கட்ட தேர்தல்களிலும் இந்திய வாக்காளர்கள் வாழ்வா தார அடிப்படையில் தமது வாக்குகளை செலுத்தி வருகிறார்கள் என்பது நிச்சயம்! 



 

;