districts

அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வேண்டுகோள்

உதகை, ஏப்.18- வாக்காளர்கள் இன்று நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்ப திவை தவறாமல் பதிவு செய்ய வேண் டும். என தேர்தல் அதிகாரிகள் தெரிவித் தனர். நீலகிரி மக்களவை தொகுதியான உதகை, குன்னுார், கூடலுார், மேட்டுப் பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய ஆறு தொகுதிகளை உள்ளடக்கி யது. 6 லட்சத்து 83 ஆயிரத்து 21 ஆண்  வாக்காளர்கள், 7 லட்சத்து 35 ஆயி ரத்து 797 பெண் வாக்காளர்கள், 97  மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம்,  14 லட்சத்து 18 ஆயிரத்து 914 வாக்கா ளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள,  ஆறு தொகுதிக ளில், உதகை, குன்னுார், கூடலுார்  ஆகிய தொகுதிகளில், 689 வாக்குச்சா வடி, சமவெளி பகுதிகளான, மேட்டுப் பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய தொகுதிகளில், 930 வாக்குச்சா வடிகள் என, மொத்தம், 1,619 வாக்குச்சா வடி மையங்கள் அமைக்கப்பட்டுள் ளது. இதில், உதகை தொகுதியில், 23 நுண் பார்வையாளர்கள், கூட லுார் தொகுதியில், 67 நுண் பார்வையா ளர்கள், குன்னுார் தொகுதியில், 37 நுண்  பார்வையாளர்கள் என, 127 நுண் பார் வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுப டுத்தப்பட்டுள்ளனர். ஆறு தொகுதிக ளுக்கு எடுத்து செல்லும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 65 வகை யான பொருட்கள்  அந்தந்த தொகுதி யில் உள்ள ஆர்.டி.ஓ.,க்கள் தலைமை யில் தயார்படுத்தப்பட்டு, வாக்குச்சா வடிகளுக்கு செல்லும் வாகனங்க ளில்  ஏற்றப்பட்டு காவல் துறை பாது காப்புடன் எடுத்து செல்லப்பட்டது. மேலும் ஆதார் அட்டை, தபால் அலு வலக கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கிய மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ் போர்ட் போன்ற ஆவணங்களில் வாக்குப்பதிவு செய் யலாம். ஜனநாயக கடமையை நிறை வேற்ற ஒவ்வொரு வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். என  தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 176 பதட்டமானவை நீலகிரி மக்களவை தொகுதியில்,  176 ஓட்டுசாவடி மையங்கள் பதட்டமா னவை என, கண்டறியப்பட்டுள்ளது. இங்கு வெப் கேமரா பொருத்தப்பட்டு, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. 170 ஜோனல்  டீம் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் செல்ல வனத்துறை மூலம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;