districts

img

மே தினம்: தொழிலாளர்கள், விவசாயிகள் எழுச்சிக்கோலம்

சேலம், மே 2- உலகம் முழுவதும் புதனன்று (மே 1) தொழிலாளர்கள் தினம் கொண்டாடப் பட்டது. அதன்ஒருபகுதியாக சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி கள் எழுச்சிகரமாக அமைந்தது. உழைக்கும் வர்க்கத்தின் உன்னத தினமான மே 1 தொழிலாளர் தினம்  புதனன்று உலகம் முழுவதும் கொண் டாடப்பட்டது. அதன்ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சேலம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அலுவலக செயலாளர் சந்திரன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா செங்கொடியை ஏற்றி  வைத்தார். இதைத்தொடர்ந்து அங் குள்ள மாமேதை மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, பி.ராம மூர்த்தி, மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகரச் செய லாளர் என்.பிரவீன் குமார், தாலுகாச் செயலாளர் கே.எஸ்.பழனிசாமி  உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  இதேபோன்று சேலம் கிழக்கு மாநகரக்குழு சார்பில் 22 இடங்களில் செங்கொடி ஏற்றி மே தினம் கொண் டாடப்பட்டது. இதில் கிழக்கு மாநகரச் செயலாளர் பொன்.ரமணி, கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மேற்கு

சிறை தியாகி ஆறுமுகம் பிறந்த  செங்கொடி பூமியான அரியாக் கவுண்டம்பட்டியில் மே தின கொடி யேற்று விழா நடைபெற்றது. மாநகர மேற்கு கமிட்டி சார்பில் 22 இடங்களில் செங்கொடி ஏற்றி மே தினம் கொண்டா டப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.  வாழப்பாடி தாலுகா குழு சார் பில் 11 இடங்களில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில், தாலுகாச் செயலாளர் தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் தாலுகாகுழு சார்பில் 10 இடங்களில் மே தின கொடி யேற்று விழா நடைபெற்றது. இதில் தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனி சாமி உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா குழு சார்பில் ஏழு இடங்களில் நடை பெற்ற நிகழ்ச்சிகளில், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கலியபெரு மாள், தாலுகாச் செயலாளர் காளி தாஸ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராமசாமி, ரங்கசாமி கந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கல்வராயன் மலைப்பகுதியில் கிளாக்காடு, கருமந் துறை, சூளாங்குறிச்சி, கல்லூர் ஆகிய  பகுதிகளில் மே தின கொடியேற்றி விழா  நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, கல்வரா யன் மலை செயலாளர் பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நங்கவள்ளி நங்கவள்ளி ஒன்றியக்குழு சார் பில் 18 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சி களில், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கவிதா, ஒன்றியச் செயலாளர் கே.ராஜாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் எடப்பாடி பகு தியில் 7 இடங்களில் கொடியேற்றி மே  தினம் கொண்டாடப்பட்டது. இதில்  தாலுகாச் செயலாளர் மு.பெரியண் ணன் பங்கேற்றார். மேட்டூர் பகுதியில் 14 இடங்களில் மே தின விழா கொண்டா டப்பட்டது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இளங்கோ, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.எம்.தேவி, ஒன்றி யச் செயலாளர் எஸ்.வசந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேச்சேரி பகுதி களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராம மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஜி.மணி முத்து, பேரூராட்சி கவுன்சிலர் பி.தங்க வேலு ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஏற்காடு, சங்ககிரி, பன மரத்துப்பட்டி, கொங்கணாபுரம் உள் ளிட்ட பகுதிகளிலும் மே தின கொடி யேற்று விழா நடைபெற்றது.

சிஐடியு

ஐடியு) சார்பில் சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. இதில் கூட்செட் சுமைப்பணி தொழிலாளர் சங்க மாநி லத் தலைவர் ஆர்.வெங்கடபதி, சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந் தன், உருக்காலை சங்க பொதுச்செய லாளர் சுரேஷ்குமார், சாலை போக்கு வரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், செயலாளர் முருகேசன், ஆட்டோ சங்க செயலா ளர் உதயகுமார், சாலையோர வியா பாரிகள் சங்க செயலாளர் தனசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மே தினப் பேரணி

சிஐடியு, ஏஐடியுசி சார்பில் மே தினப் பேரணி சேலம் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள அம்பேத்கர் சிலை முதல் கோட்டை மைதானம் வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமை வகித்தார். இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் வி.முருகன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், ஏஐடியுசி மாநிலத் தலைவர் என்.பெரியசாமி, சிஐடியு தலைவர்கள் எஸ்.கே.தியாகராஜன், டி.உதயகுமார், ஆர்.வெங்கடபதி, அரசு ஊழியர் சங்க செயலாளர் பி.சுரேஷ், வங்கி ஊழியர் சங்க செய லாளர் எஸ்.தீனதயாளன், ஏஐஐஇஏ பொதுச்செயலாளர் ஆர்.ஆனந்த், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தலை வர் எஸ்.ஹரிகரன், செயலாளர் கோபால், ஏஐபிஇஏ செயலாளர் எஸ்.சம்பத், இன்சூரன்ஸ் சங்க தலைவர் சி.பழனிசாமி, டிஎன்ஜியு மாநிலப் பொருளாளர் என்.முத்துக்குமரன், ஏஐடியுசி செயலாளர் சி.பாலகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடி வில், ஏஐடியுசி நிர்வாகி எம்.முனுசாமி நன்றி கூறினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனை அருகிலி ருந்து 138 ஆவது மே தின ஊர்வலம் புறப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மேளதா ளங்களுடன் செங்கொடிகளை ஏந்தி முழக்கமிட்டு அணிவகுத்தனர். இப் பேரணியானது மேட்டூர் ரோடு, சத்தி ரோடு வழியாக வீரப்பன்சத்திரத்தை அடைந்தது. இதையடுத்து வீரப்பன் சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இப்பொதுகூட்டத்திற்கு ஏஐ டியுசி மாவட்ட துணைத்தலைவர் ஸ்டா லின் குணசேகரன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் ஆர்.ரகுராமன், ஏஐடியுசி பிரபா கரன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் இரா.முத்தர சன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஏ. ராதிகா ஆகியோர் சிறப்புரையாற்றி னர். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், விதொச மாவட்ட தலைவர் கே.ஆர்.விஜயராகவன், ஏஐ டியுசி சந்திரன் மற்றும் கணேஷ் உள் ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம் நன்றி கூறினார். இதேபோன்று 138 ஆவது மே தின கொடியேற்று விழா மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி தலைமை வகித்தார். மூத்த தோழர் கே.துரை ராஜ் கொடி ஏற்றினார். மாவட்டச் செய லாளர் ஆர்.ரகுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற மே தின கொடி ஏற்று விழாவிற்கு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க  நிர்வாகி சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட உதவித்தலைவர் என்.முரு கையா செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச். ஸ்ரீராம் உள்ளிட்ட சகோதர சங்கங்க ளின் தலைவர்கள் திரளானோர் பங் கேற்றனர்.  இதேபோன்று, பவானி தாலுகா வில் சிபிஎம், சிஐடியு, விதொச, மாற் றுத்திறனாளிகள் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு களின் சார்பில் 17 இடங்களில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதேபோல அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் சார்பில் பெருந் துறை, கோபி, அந்தியூர் உள்ளிட்ட பகு திகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் நம்பியூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. இவ் விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.எம்.முனுசாமி, தாலுகாச் செயலா ளர் ஜி.ஏ.துரைசாமி, நகரச் செயலாளர் எம்.கே.நடராஜன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

உதகை

நீலகிரி மாவட்டம், உதகையில் 138 ஆவது மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியுடன் நடை பெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.வினோத் மற்றும் ஏஐடியுசி மாவட் டச் செயலாளர் போஜராஜன் தலைமை ஏற்றனர். காபி ஹவுஸ் சதுக்கத்தில் துவங்கிய பேரணியை சிஐடியு மாநிலச்  செயலாளர் டி.குமார் தொடங்கி வைத் தார். இப்பேரணி மார்க்கெட், லோயர் பஜார் வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்து பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில், தலைவர்கள் உரை யாற்றினர். முடிவில், சிஐடியு மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன் நன்றி கூறினார்.

எஸ்.ராஜேந்திரன், மாநிலச் செயலாளர், சிஐடியு

உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் முதலாளிகளின் சுரண்ட லுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு இந்தியாவும் விதி விலக்கல்ல. இந்திய அளவில் சமூக நீதி, வறுமை, சுரண்டல் போன்றவை பாட் டாளி வர்க்கத்தை சூழ்ந்துள்ளது. தேசியவாதம், பண்பாட்டு பிரிவினைவாதம் ஆகியவற்றோடு பாசிசம் தற்போது கைகோர்த்துள்ளது. ஜனநாயகம் மற்றும்  தொழிற்சங்க உரிமைகள் மீதான கடுமையான புதிய தாக்குதல்களை உல கம் முழுவதும் தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். தனியார் மயமாக்கல், ஒப்பந்தம், அவுட்சோர்சிங், டெலிவொர்க்கிங் மற்றும் சேவை குத்தகை போன்ற  புதிய தாராளவாத தாக்குதலின் வடிவங்கள் தற்போது அரங்கேற்றப்பட்டு வரு கின்றனர். இந்திய தொழிலாளர்கள் 150 ஆண்டுகாலம் போராடி பெற்ற ஊதிய பாது காப்பு, வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்புகளை உள்ளடக்கிய 44 சட்டங் களை மோடி அரசு மாற்றி நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளாக நிறை வேற்றியுள்ளது. தனிப்பட்ட அதிகாரங்களை பெற்றிருக்கும் மாநில அரசு களின் மீது தொடர்ச்சியான தாக்குதலை மோடி அரசு நிகழ்த்தி வருகிறது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் காரணமாக மக்களுக்கு எதிரான திட்டங்கள் தடுக்கப்பட்டு வருகிறது.

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், சிபிஐ

ஒன்றிய அரசு கடந்த 10 ஆண்டுகளில் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை என இந்தியா கூட்டணி கட்சிகள் விமர் சிக்கிறது. இதற்கு பதில் சொல்ல இயலாத பிரத மர் மோடி, மக்களை பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுக்கிறார். இது பிரதமர் பொறுப்பிற்கான நாகரீகம் அல்ல. தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என மக்களி டையே மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என பேசுவது ஜனநாயகத்திற்கு எதி ரானது. தோல்வி பயத்தால் பேசிக்கொண்டிருக்கிறார். இது ஹிட்லரின் வழியை  மோடி பின்பற்றுகின்றார். இத்தகைய செயல்பாடு நாட்டிற்கு உகந்தது அல்ல. இனியாவது தேர்தல் ஆணையம் கண்ணை கட்டிக்கொள்ளாமல் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.


 


 

;