districts

ஆட்சியாளர்களின் கொள்கைகளை எதிர்த்து கேள்வி எழுப்புவோம்

சென்னை, ஏப். 2 - ஆட்சியாளர்களின் கொள்கைகளை எதிர்த்து கேள்வி எழுப்புவோம் என்று  சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறினார். தென்சென்னையில் சிஐடியு-ஏஐடியுசி சார்பில்  138வது மே தின பேரணி மே 1 அன்று சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப் பாதை முதல் ஜாபர்கான்  பேட்டை வரை நடை பெற்றது. சிஐடியு -  ஏஐடியுசி சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் தொழி லாளர்கள் சாரைசாரை யாக கலந்து கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசியதன் சுருக்கம் வருமாறு: ஆக்கிரமிப்புகளை, யுத்தத்தை நிறுத்த காலந்தோறும் தொழிலாளி வர்க்கம் போராடி வரு கிறது. இன்றைக்கும் பாலஸ் தீனத்தின் மீதான போரை நிறுத்த கோரி அந்நாட்டு அதி பரை எதிர்த்து இஸ்ரேலிய தொழிலாளி வர்க்கம் போரா டுகிறது. காசா மீது தாக்கு தலை தொடங்கியதும், இஸ்ரேலில் இருந்த பால ஸ்தீனிய தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது, இஸ்ரேலில் கட்டிட வேலை செய்ய உ.பி. அரியானா மாநிலங்களில் இருந்து பாஜக அரசு தொழிலாளர்களை அனுப்பும் கேடுகெட்ட செயலை செய்கிறது. கணக்காயர் அலுவலகத்திலும் பிழைப்பூதிய முறை  நவீன தாராளமய கொள்கை அமல்படுத்தப் பட்டதி லிருந்து தொழிலா ளர் நலன்கள் அழிக்கப் பட்டு வருகிறது. சமூக பாது காப்புடன் கூடிய வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. சுய தொழில்களை சாதனை யாக கூறுகின்றனர். தலைமை கணக்காயர் அலுவலத்திலும் தற்காலிக, ஒப்பந்த, பிழைப்பூதிய முறையை கொண்டு வந்து விட்டனர். ஒன்றிய அரசின் தொழி லாளர் நலத்துறை அலு வலகத்திலேயே சட்டச் சலுகைகள் இன்றி, தினக் கூலி தொழிலாளர்கள் உள்ளனர். அதன் தொடர்ச்சி யாகவே, உள்ளாட்சிகளில் நிரந்தர பணி முறை நீக்கி  மாநில அரசு உத்தர விட்டுள்ளது. ஒன்றிய, மாநில  அரசுகளின் கொள்கை களை கேள்வி எழுப்ப வேண்டியது நமது கடமை. போராட்டத்தால் நிறுத்தப்பட்ட சட்டங்கள் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தால் 4 தொழி லாளர் சட்டத் தொகுப்புகள் அமலாக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். சங்கம் சேரும் உரிமையை பறிக் கும் வகையில் அந்த தொகுப்புகள் உள்ளன. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை சாதி, மதம்,  மொழியின் பெயரால் சீர் குலைக்க முயற்சிக்கின் றனர். இதனை முறியடிப் போம். ஒன்றுபட்ட இந்தி யாவை பாதுகாக்கும் வகை யில் ஒன்றியத்தில் நிச்சயம் புதிய அரசு அமையும். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்திற்கு ஏஐடியுசி கவுரவத் தலைவர் எஸ்.ஏழுமலை தலைமை தாங்கினார். ஏஐடியுசி அகில இந்திய செயலாளர் வஹிதா நிஜாம், மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.அழகேசன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், பொருளாளர் ஏ.நடராஜன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் டி.சாந்தி, துணைச் செய லாளர் எஸ்.சந்தானம் உள்ளிட்டோர் பேசினர்.

;