districts

திருச்சி முக்கிய செய்திகள்

500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

புதுக்கோட்டை, ஏப்.25 - புதுக்கோட்டை அருகே அரசின் பொது விநியோகத் திட்ட அரிசி சுமார் 500 கிலோ காரில் கடத்திச் செல்லப்பட்ட போது பறிமுதல் செய்யப் பட்டது. புதுக்கோட்டை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் புதன் கிழமை பகல் 12 மணிக்கு  காரைக்குடி சாலையில் கடியாப்பட்டி பிரிவு சாலையில் வாகனத் தணி க்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரில் சோதனை யிட்ட போது, 10 மூட்டை களில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த திரு மயம் இருதயபுரம் அரு கேயுள்ள மகமாயிபுரத் தைச் சேர்ந்த ராமநாதன்  (38) கைது செய்யப்பட் டார்.

மணல் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு

திருச்சிராப்பள்ளி, ஏப்.25 - திருச்சி ஸ்ரீரங்கம் ஒய் ரோடு ஜங்சன் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீரங்கம் போலீசார் அந்த  வழியாக வந்த ஒரு சரக்கு  வாகனத்தை சோதனை செய்தனர்.  இதில் அனுமதியின்றி ஒரு யூனிட் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மணல் கடத்தி வந்த சரக்கு வேனின் ஓட்டுநர், கிளீனர், சரக்கு வேனின் உரிமையாளர் அல்லிராணி, திருவானைக் காவல் திம்மராய சமுத்தி ரத்தை சேர்ந்த மணி கண்டன் (32) ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியையிடம் நகை பறிப்பு

திருச்சிராப்பள்ளி, ஏப்.25- திருச்சி இனாம்குளத் தூர் பகுதியைச் சேர்ந்த வர் ரோஸ்லின் மேரி (37).  இவர் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணி யாற்றி வருகிறார். இந்நி லையில் அவர் கே.கே.நகர் சாலை சுந்தர் நகர்  பகுதியில் உள்ள ஒரு  பள்ளியில் 10 ஆம் வகுப்பு  தேர்வு வினாத்தாள் திருத் தும் பணிக்கு சென்றிருந் தார்.  புதனன்று மாலை பணி முடிந்து மன்னார் புரம் ரவுண்டானாவில் இரவு 8 மணிக்கு வந்து இறங்கி உள்ளார். பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள இ.பி அலுவலகம் அருகே நடந்து சென்றார். இதனை நோட்டமிட்ட இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அவர் கழுத்தில் இருந்த 1.5 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.  பின்னர் அந்த பகுதி யில் உள்ள ரோந்து போலீ சாருக்கு தகவல் கொடுக் கப்பட்டது. இந்த சம்பவம்  குறித்து கண்டோன் மென்ட் காவல் நிலையத் தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்  பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

தீமை செய்யும் பூச்சிகளில் இருந்து  பயிர்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

தஞ்சாவூர், ஏப்.25-  தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டார வேளாண்துறை உதவி இயக்குநர் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், மதுக்கூர் வட்டாரத்தில் முன் பட்ட குறுவை  இளம் பயிர்கள் பூக்கும் பருவத்திலும், உளுந்து, நிலக்  கடலை பயிர்கள் அறுவடை நிலையிலும் உள்ளன. பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ள பயிர்களை சுற்றி  தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது அவசியமாகும்.  இந்த பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் மஞ்சள் வண்ண ஒட்டுப்  பொறிகள் மிக முக்கியமாகும். மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி யில் வெள்ளை ஈக்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், பூஞ்சை  கொசுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் தாய்ப்பூச்சி களை எளிதில் கவர்ந்து, அடுத்த கட்ட இனப்பெருக்கத்தை தவிர்த்து பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக் கிறது.  பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காமல் இருப்பதால் சுற்றுச் சூழல், மண், நீர், காற்று ஆகியன பாதுகாக்கப்படுகிறது. ஒட்டு  பொறியின் இருபுறமும் பசை இருப்பதால் சாறு உறிஞ்சும்  பூச்சிகள், தத்துப் பூச்சிகள், பழ ஈக்கள் மற்றும் இலை சுருட்டுப் பூச்சிகள், வெள்ளை ஈக்கள், கொசுக்கள், புகை யான்கள் போன்றவற்றை மிக எளிதாக பிடித்து அழிக்கிறது. ஒட்டுப் பொறிகளை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். பயிர்களின் வளர்ச்சி பருவம் மற்றும்  கதிர் கொடுக்கும் தருணங்களில் ஏக்கருக்கு 10 ஒட்டுப் பொறி கள் வீதம் பயன்படுத்தினால் தீமை செய்யும் பூச்சிகளில் இருந்து பயிர்களை நாம் பாதுகாத்து பலனடையலாம்.  இதுபற்றி கூடுதலாக விவரம் அறிய வேளாண் அலுவல கத்தை தொடர்பு கொண்டு விவசாயிகள் தங்களுடைய விவ சாயத்தை மேம்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பள்ளி பூட்டை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளை

திருச்சிராப்பள்ளி, ஏப்.25 - திருச்சி நீதிமன்றம் எம்.ஜ.ஆர். சிலை அருகில் மாநகராட்சி  தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த  பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் அம்சவல்லி. பள்ளி ஆசிரியர்கள் புதனன்று மாலை வழக்கம்போல் பள்ளியை பூட்டி விட்டுச் சென்று விட்டனர். பின்னர் வியாழனன்று காலை வந்து பார்த்தபோது, பள்ளி யின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்த னர். தலைமை ஆசிரியை அறையின் பீரோவில் வைத்திருந்த  ரூ.25 ஆயிரம் பணத்தை திருடு போயிருந்தது. மேலும் அந்த  கும்பல் பள்ளியில் இருந்த மின்விசிறிகள், விளையாட்டுச் சாமான்களை அடித்து நொறுக்கி சூறையாடிச் சென்றனர்.  நூலகத்திலும் புத்தகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.  பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் முக்கியமான பொருள்கள் திருடு  போயிருந்தன. உடனே இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரி யர் அம்சவல்லி திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார்  அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை  நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வர வழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த  சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் முதற்கட்ட  விசாரணையில், அந்தப் பள்ளி பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோதக் கும்பல்கள் மது அருந்துவதாகவும், சமூகச்  சீர்கேடு செயல்கள் நடப்பதாகவும் பள்ளியின் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கந்து வட்டிக் கொடுமை அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

அரியலூர், ஏப்.25- கந்து வட்டிக் கொடுமை யால் விரக்தியடைந்த விவ சாயி, அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும் பத்தினருடன் வியாழக் கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது. அரியலூரை அடுத்த சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரங்க நாதன்(60). இவர், பொட்டக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பாரி என்பவரிடம், தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதை யடுத்து வட்டி தொகையை சேர்த்து, தான் பெற்ற கடனு டன் ரூ.5.40 லட்சத்தை திரும்ப அளித்துள்ளார். ஆனாலும், பாரி நிலத்தை  தர மறுப்பதாக கூறப்படு கிறது.  மேலும், கூடுதலாக  பணம் கேட்டு மிரட்டுவதாக வும், காவல்துறையிடம் ரங்க நாதன் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் வேதனை அடைந்த விவசாயி ரங்க நாதன், தனது மனைவி சந்திரா (50), மகன் பிரகாஷ்  (30) ஆகியோரை வியாழக் கிழமை ஆட்சியர் அலுவல கத்துக்கு அழைத்து வந்து, அங்கு அனைவரின் உடலி லும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதையறிந்த அங்குப் பணியில் இருந்த காவல்  துறையினர், ரங்கநாதன் மற்றும் அவரது குடும்பத்தி னரை மீட்டு, அரியலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

4 மாதமாக மணிமுத்தாறு  அருவி மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

திருநெல்வேலி, ஏப். 25- நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மணி முத்தாறு அருவி. தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.அருவியில் குளிக்க  ஒருவருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மணிமுத்தாறு அருவி மூடப்பட்டது. தொடர்ந்து 4 மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை அருவியில் குளிக்க அனுமதி கொடுக்க வில்லை.இதனால் சுற்றுலா  பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவ தால் உடல் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளை தேடி மக்கள் அலைகின்றனர்.  நீர்வரத்து உள்ள அகத்தியர் அருவி ,மணிமுத்தாறு அருவிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வார இறுதி நாட்கள் மட்டுமல்லாது தினசரி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மணிமுத்தாறு அருவி மூடப்பட்டிருப்பதால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே மணிமுத்தாறு அருவியில் குளிக்க உடனே வனத்துறை அனுமதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வனத்துறை சார்பில் கூறுகையில், அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பணிகள் முடிந்த பின்னர் குளிக்க அனுமதி வழங்கப் படும் என தெரிவித்தனர்.

நியோமேக்ஸ் நிதி நிறுவன  மோசடியில் மேலும் 4 பேர் கைது

மதுரை, ஏப்.25- மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட  நியோமேக்ஸ் நிதி நிறுவனம் இரட்டிப்பு லாபம் தருவதாக  கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இதுகுறித்து  மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவில் அளிக்கப்  பட்ட புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட நிறு வனத்தின் இயக்குனர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட முதலீட்டா ளர்கள், பொருளாதார குற்றப்பிரிவில் மீண்டும் புகார் அளித்திருந்தனர்.  இதன்பேரில், தேவகோட்டையை சேர்ந்த இயக்கு னர்களில் ஒருவரான சார்லஸ் மற்றும் இளையராஜா, தேனியைச் சேர்ந்த சஞ்சீவ், ராஜ்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.

கோவில் நிர்வாகிகளைக் கொல்ல முயன்ற  6 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு மதுரை, ஏப்.25- கரூர் மாவட்டத்தில் கோவில் நிர்வாகி களை கொலை செய்ய முயன்ற வழக்கில் 6 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டம் அச்சமாபுரம் பகுதியில்  கெங்கல அம்மன் கோவில் உள்ளது. இந்த  கோவிலில் புதிய நிர்வாகிகள் பெறுப்  பேற்றனர். இதில் பழைய நிர்வாகிகளுக் கும், புதிய நிர்வாகிகளுக்கும் இடைய தக ராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு  இரவு அச்சமாபுரம் கோவில் அருகே இரு  தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்  பட்டது. இதில் அச்சமாபுரம், அசோக், சுகுமார் மணிவண்ணன் இதயகனி, மாரி யாயி ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில், அரங்க நாதன்பேட்டையை சேர்ந்த குணசேகரன் (எ) வேலுசாமி, தினேஷ் (எ) பெரியசாமி, விக்னேஷ், முத்தமிழ்செல்வன், சதீஸ் (எ) முருகன், சரவணன் ஆகிய 6 பேர் மீது வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு  செய்தனர். இது தொடர்பான வழக்கு, கரூர் மாவட்ட  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த கரூர் நீதி மன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்ட்ட 6 பேரையும் விடுதலை செய்தது. இந்த நிலையில், படுகாயமடைந்த சுகுமார், இந்த வழக்கில் 6 பேரை விடுதலை  செய்த கரூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து,  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராமகிருஷ்ணன் முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர்  நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதி,  குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் 7 ஆண்டு  சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் குடவாசல் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

திருவாரூர், ஏப்.25 - குடவாசல் பேரூராட்சிக்குச் சொந்தமான  கடைகளுக்கு வாடகை செலுத்தாததால் பேரூராட்சி நிர்வாகம் புதன்கிழமை மாலை 11  கடைகளை பூட்டி சீல் வைத்தது. பின்னர் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் மீண்டும் கடை கள் திறக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையத்தில் 9 கடைகள் உள்ளன. அதேபோல் அண்ணா தெற்கு வீதி யில் வணிக வளாகத்தில் 8 கடைகள் என மொத்தம் 17 கடைகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அண்ணா  தெற்கு வீதியில் உள்ள எட்டு கடைகள் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று  கடைகளை ஏலம் எடுத்த நபர்கள், இரண்டு ஆண்டுகளாக வாடகை கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், குடவாசல் பேரூ ராட்சி செயல் அலுவலர் என்.சி.பரமேஸ்வரி, வாடகை தராமல் செயல்பட்டு வந்த 11 கடை களையும் பூட்டி சீல் வைத்தார். அண்ணா தெற்கு வீதியில் உள்ள 8 கடை களில், ஒரு கடை திமுக நகர அலுவலக மாக செயல்பட்டு வருகிறது. உள் வாடகைக்கு  செயல்பட்டு வந்த திமுக அலுவலகம் மற்றும் 11 கடைகள் பூட்டப்பட்டதை அடுத்து,  கடையின் வாடகைதாரர்கள் மற்றும் திமுக வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடனடியாக மூன்று கடைகளுக்கு வாடகை  செலுத்தப்பட்டது. இதையடுத்து தற்காலிக மாக அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

மயிலாடுதுறை, திருச்சியிலிருந்து வரும் ரயில்கள் திருவாரூர் வரை நீட்டிப்பு ரயில் பயணிகள் வரவேற்பு

திருவாரூர், ஏப்.25 - திருவாரூர் ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையொட்டி, திருவாரூர் வரை ரயில்கள்  நீட்டிக்கப்பட்டதற்கு மாவட்ட ரயில்  பாதுகாப்பு நலச் சங்கம், ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை, திருச்சியிலிருந்து வரும்  ரயில்கள் திருவாரூர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன. இந்த நடைமுறை மே 2 அன்று முதல்  அமலுக்கு வர உள்ளது. அதன்படி, விழுப்புரத்தில் மாலை 6.25 -க்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறை, பேரளம்  பூந்தோட்டம் நன்னிலம் வழியாக இரவு 10.45  மணிக்கு திருவாரூர் வந்தடைந்து, மறுநாள்  காலை (மே 3) 5.10 மணிக்கு திருவாரூரி லிருந்து புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு விழுப்புரம் செல்லும். இதேபோல், மே 2 அன்று இரவு 8.25-க்கு  திருச்சியிலிருந்து புறப்படும் வண்டி, தஞ்சா வூர், சாலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச் சேரி வழியாக திருவாரூருக்கு இரவு 11.05 -க்கு வந்து, மறுநாள் காலை 4.45-க்கு புறப்பட்டு  காலை 7 மணிக்கு திருச்சியை அடையும். மே 3 அன்ற அகஸ்தியம்பள்ளியில் காலை  5.55-க்கு புறப்பட்டு வேதாரண்யம், தோப்புத் துறை, கரியாப்பட்டினம், திருத்துறைப் பூண்டி, மணலி, அம்மனூர், திருநெல்லிக் காவல் வழியாக திருவாரூருக்கு காலை 7.55  மணிக்கு வந்தடைந்து, இரவு 7.35 மணிக்கு  திருவாரூரிலிருந்து புறப்பட்டு அகஸ்தியம் பள்ளிக்கு இரவு 9.30-க்கு சென்றடையும். திருவாரூரில் காலை 8.30-க்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு காலை 10.05 மணிக்கு  சென்றடையும். மாலை 5.15 மணிக்கு பட்டுக் கோட்டையில் புறப்பட்டு, திருவாரூருக்கு மாலை 6.55-க்கு வந்து சேரும் என தென்னக  ரயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே அறிவித்துள்ள இந்த ரயில் நீட்டிப்பு குறித்து, திருவாரூர் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் மற்றும் ரயில்  பயணிகள் கூறுகையில், “தற்போது நீட்டிக்கப் பட்ட ரயில், கோடைகால பயணம் மேற்கொள் வோருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.  திருவாரூருக்கு புதிய ரயில்கள் வரக் காரண மாக இருந்த கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன் மற்றும் இந்த முயற்சிக்கு ஆதர வளித்த அனைவருக்கும் நன்றி” என்றனர்.

 

;