districts

திருச்சி முக்கிய செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த வாலிபர் கைது

திருவாரூர், மே 5 - திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு  அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் நெடுஞ்சாலைப் பகுதிகளில், இருசக்கர வாக னங்களில் சாகசத்தில் (Wheeling) ஈடுபட்டு அதனை சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், குடவாசல் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட திருவாரூர்-கும்பகோணம் சாலையில் மஞ்சக் குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து,  அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை  33-மேட்டிருப்பு பகுதியைச் சேர்ந்த அஜய் (19) கைது  செய்யப்பட்டார். மேலும், அவர் சாகசம் (Wheeling) செய்ய  பயன்படுத்திய இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்று இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொண்டு, வாகனங்களை  பறிமுதல் செய்து, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என  திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் குமார் எச்சரித்துள்ளார்.

தண்ணீர் பந்தல் திறப்பு

பாபநாசம், மே 5 - திமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு  நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை மதகடி பஜாரில் நடந்த நிகழ்ச்சியில், அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி மனோகரன், பேரூராட்சி துணைத் தலைவர் அழ கேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகி பக்கீர் மைதீன், பேரூராட்சி உறுப்பினர்கள், மகளிரணி, இளை ஞரணி, வர்த்தக அணியினர் பங்கேற்றனர்.

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பாபநாசம், மே 5 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு  ஆசிரியர் பிரதிநிதி செல்வகுமார் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், இல்லம் தேடி தன்னார்வலர் கார்த்திகா, உறுப்பினர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 10, 11, 12  ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களை  கண்டறிதல், தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுத ஊக்கப்படுத்துதல், தேர்ச்சி பெற்ற  மாணவர்கள் உயர்கல்வி பெற உரிய வழிகாட்டுதல், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம் படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வணிக வரி அலுவலகம் மீண்டும் பாபநாசத்தில் இயங்குமா?

பாபநாசம், மே 5 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வணிகர் சங்கம் சார்பில் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. பாப நாசத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் குமார் தலைமை  வகித்தார். செயலர் கோவிந்தராஜன் தீர்மானங்களை வாசித்தார். பொருளாளர் ராமராஜ் நிதி நிலை அறிக்கையை  வாசித்தார்.  இதில் தொழில் வரி, உரிம கட்டணத்தை பாபநாசம்  பேரூராட்சி பல மடங்கு உயர்த்தியதை திரும்ப பெற  வேண்டும். பழைய பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி யில் உள்ள ஹைமாஸ் லைட்டை சீர் செய்ய வேண்டும். வணிக வரி அலுவலகம் மீண்டும் பாபநாசத்தில் இயங்க வேண்டும். பாபநாசத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும். கடைகளில் நடக்கும் தொடர் திருட்டை  காவல்துறை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

உணவுப் பொருள் பதுக்கல்: புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு தஞ்சையில் சுவரொட்டி மூலம் விழிப்புணர்வு

தஞ்சாவூர், மே 5-  தஞ்சாவூரில் உணவுப் பதுக்கல்  குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா  தொலைபேசி எண் தொடர்பாக சுவ ரொட்டிகள் மூலம் உணவு கடத்தல் தடுப்பு  பிரிவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு  பிரிவு காவல்துறை தலைவர் ஜோஷி  நிர்மல்குமார் உத்தரவின்படி, அத்தியா வசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு, உணவுக் கடத்தல் தடுப்புப் பிரி வினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.  இந்நிலையில் திருச்சி மண்டல உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அறிவுரைப்படி, தஞ்சை மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்.18005995950 அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தஞ்சை காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் முருகானந்தம், உதவி ஆய்வாளர் பிர சன்னா மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங் களான பேருந்து நிலையம், ரயில் நிலை யம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்ட ணமில்லா தொலைபேசி எண்ணின் சுவ ரொட்டியை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மினி பேருந்தை களஞ்சேரி வரை இயக்க கோரிக்கை

பாபநாசம், மே 5 - தஞ்சாவூரை அடுத்த பள்ளியக்கிரஹாரத் திலிருந்து மெலட்டூர் அருகே கோவத்தக்குடி  வரை இயக்கப்படும் மினி பேருந்தை களஞ் சேரி வரை இயக்க கிராம மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “தஞ்சாவூரிலிருந்து பள்ளியக்கிரஹாரம் வழி யாக குலமங்களம், கூடலூர், குருங்களுர், மெலட்டூர் அருகே உதாரமங்களம், களஞ்சேரி  வழியாக திருக்கருக்காவூருக்கு அரசுப் பேருந்து 1980-களில் நாள் ஒன்றுக்கு ஐந்து முறை சென்று வந்தது.  இந்நிலையில் 1984-க்குப் பின்னர் அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் இந்தத் தடத்தில் இயக்கப்பட்டு வந்த 2 மினி பேருந்துகளும் கொரோனாவிற்குப் பின் நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது மீண்டும் ஒரு மினி பேருந்து மெலட்டூர் அருகே கோ வத்தக்குடி வரை இயக்கப்படுகிறது. அதை  சாலியமங்கலம் அருகே களஞ்சேரி வரை  நீட்டிக்க வேண்டும். இதேபோன்று அரசு  பேருந்து இயக்கப்படுமானால் எட்டு ஊராட்சி களைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவர்” என்றனர்.

பருத்தியில் மாவுப் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

பாபநாசம், மே 5 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 350 ஹெக்டேர் பரப்பில் பருத்தி பயிரி டப்பட்டுள்ளது. பருத்தியில் மாவுப் பூச்சி தாக்குதலினால் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.  மாவுப் பூச்சி தாக்குதலில், ஆரம்ப நிலையிலிருந்து பருத்தி பயிரை காப்பது எப்படி என்பது குறித்து பாப நாசம் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வறண்ட வானிலை நிலவும் கோடைக் காலங்க ளில், போதிய அளவு தண்ணீர் இல்லாததால், பருத்தியை  பல்வேறு மாவுப் பூச்சிகள் தாக்கி சேதத்தை உண்டாக் கும். அவற்றுள் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பப்பாளி மாவுப் பூச்சி, வெள்ளை நிறத்தில் காணப்படும்  பருத்தி மாவுப் பூச்சி, இளஞ்சிவப்பு மாவுப் பூச்சி மற்றும் வால் மாவுப் பூச்சி ஆகியவை முக்கியமானவை. வறண்ட வானிலை, அதிகமான வளிமண்டல வெப்ப நிலை ஆகியவை மாவுப் பூச்சி தாக்குதலுக்கு காரணி களாகும். பஞ்சு போன்ற படர்ந்த முட்டைகளுடன் கூடிய  இப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இலைகள் மற்றும் தண்டு களில் பரவி காணப்படும். இலை மற்றும் தண்டுகளில் இருந்து சாரை  உறிஞ்சுவதால், இலைகள் சிறுத்து, மஞ்சள்  நிறமாகி, பின்னர் உதிர்ந்து விடும்.  தாக்கப்பட்ட செடியானது வளர்ச்சி குன்றி, குட்டையாக  காணப்படும். மாவுப் பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற திரவத்தை உண்பதற்கு எறும்புகள் செடியின் மேல்  ஊர்ந்து செல்வதை காணலாம். மேலும் இலையின் மேற்பரப்பில் கேப்னோடியம் எனும் பூஞ்சை படர்வதால்  ஒளிச் சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் குறைகிறது.  தாவர வகை மருந்துகளான வேப்பெண்ணை 2 சத வீதம், அதாவது 1 லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் அல்லது  வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் அல்லது மீன் எண்ணெய் சோப்பு 1 லிட்டருக்கு 25 கிராம் என்ற அளவில்,  தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். மாவுப் பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத  நிலையை கடந்தால், ஒரு ஏக்கருக்கு டை மீத்தோயெட் 30  ஈசி 40 மில்லி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்த லாம். மாவுப் பூச்சிகளின் தாக்குதலை ஆரம்ப நிலையி லேயே கட்டுப்படுத்த, தாவர மருந்துகள் மற்றும் உயிரி யல் கட்டுப்பாட்டு முறையை பின்பற்ற வேண்டும்” என  கூறப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளுக்கு தடையின்றி  குடிநீர் வழங்க நடவடிக்கை

தஞ்சாவூர், மே 5-  தஞ்சாவூர் மாவட்டத்தில் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர்  பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் முன்னிலையில், ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குதல் தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு  குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட அலுவலர்களுடன்  கலந்தாலோ சனைக் கூட்டம் மற்றும் குடிநீர் பணிகள் கள ஆய்வு நடை பெற்றது.  கோடை காலத்தில் ஊரகப் பகுதிகளுக்கு  தடையின்றி குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இலங்கைக்கு கடத்தவிருந்த மாத்திரைகள் பறிமுதல்: ஒருவர் கைது

இராமநாதபுரம், மே 5- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த பெரியபட்டினம் கடல் பகுதியில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்துவதற்கு வாகனத்தில் கொண்டு செல்வதாக கடலோர காவல்படை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து திருப்புல்லாணியை அடுத்த ஆனைகுடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை சோத னையிட்டனர். அதில், ரூ.11.88 லட்சம் மதிப்பிலான வலி  நிவாரணி மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வாகன ஓட்டுநரான திருப்புல்லாணி நம்பியான் வலசை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(20) என்பவரை பிடித்து திருப்புல்லாணி காவல் நிலை யத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினரை வெடிகுண்டு காட்டி மிரட்டிய 4 பேர் கைது

தேனி, மே 5-  பெரியகுளம் அருகே வாகனத் தணிக்கையிலிருந்த காவல்துறையினரை அரிவாள், நாட்டு வெடிகுண்டை காட்டி மிரட்ய 4 பேரை கைது செய்தனர்.  தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலம்  கல்லுக்கட்டு பேருந்து நிறுத்தம் பகுதியில் ஜெயமங்க லம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாகச் சென்ற ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அப்போது, ஆட்டோவில் இருந்த ஜெயமங்கலம், காந்தி நகர் காலனியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ்(24), வீரனேஸ்வ ரன்(18), பிரகதீஷ்(16), பிரபு(30) ஆகியோர் காவல்துறை யினருடன் வாக்கு வாதம் செய்துள்ளனர். அப்போது, சூர்யபிரகாஷ் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. சூர்யபிரகாஷ் உள்ளிட்ட 4 பேரும் அரிவாள், நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை காட்டி மிரட்டியுள்ளனர். அப் பகுதியில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் சூர்யபிரகாஷ் உள்ளிட்ட 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியை திருமணம்  செய்தவர் மீது வழக்கு

 சிவகாசி, மே 5- சிவகாசி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது பழைய வெள்ளையாபுரம். இப்பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(20). இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 17  வயது சிறுமியை திருமணம் செய்ததாக தகவல்வந்தது. எனவே, இதுகுறித்து விசாரித்த சமூக நல அலு வலர் இராஜேஸ்வரி திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலமுருகன் மீது வழக்குப்  பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு தயாரிக்க உரிமம் பெறாதவர்களுக்கு  வேதிப் பொருள் விற்றால் கடும் நடவடிக்கை   விருதுநகர் மாவட்ட எஸ்.பி உத்தரவு

விருதுநகர், மே 5- விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்க உரிமம்  பெறாதவர்களுக்கு இரசாயன மூலப் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட  அவர் மேலும் கூறுகையில், பட்டாசு தயாரிக்க உரிமம் பெற்ற வர்களுக்கு மட்டுமே இரசாயன மூலப் பொருள் விற்பனை  செய்ய வேண்டும். பிறருக்கு விற்பனை செய்தால் சட்டப்படி  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆலைகளை குத்தகை மற்றும் உள் குத்தகைக்கு எடுத்து  பட்டாசு தயாரிப்போருக்கும் வேதிப் பொருட்களை விற்கக் கூடாது. பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலா ளர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். 

 



 

;