districts

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தின கொடியேற்றம், ரத்த தான நிகழ்ச்சி

தஞ்சாவூர்/திருவாரூர்/திருச்சிராப்பள்ளி, மே 8-  தொழிலாளி வர்க்கத்தின் மகத் தான தோழரும், உழைப்பாளி மக்க ளுக்காக தனது வாழ்நாளை  அர்ப்ப ணித்தவருமான தோழர் வி.பி.சிந்தன் 37 ஆம் ஆண்டு நினைவு  தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப் பட்டது. தஞ்சை சிஐடியு தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க  அலுவலகத்தில், உழைப்பாளி மக்க ளின் ஒப்பற்ற தலைவன் தோழர் வி.பி.சிந்தன் 37 ஆம் ஆண்டு நினைவு தினம், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க 58 ஆம் ஆண்டு  அமைப்பு தின நிகழ்ச்சி சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் புதன்கிழமை நடை பெற்றது.  சிஐடியு கொடியை, மாவட்ட துணைத் தலைவர் ஈ.டி.எஸ் மூர்த்தி,  மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கக் கொடியை செயலாளர் பொன்.ரவிக்குமார் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.  சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.ராஜா, எஸ்.மில்லர் பிரபு, தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் ஆர். மணிமாறன், மருந்து விற்பனைப்  பிரதிநிதிகள் சங்கத் தலைவர் க. ராமச்சந்திரன், பொருளாளர் டி.நீல கண்டன், இணைச் செயலாளர் எஸ்.சத்தியநாராயணன் உள்ளிட்ட  பலர், வி.பி.சிந்தன் உருவப்படத் துக்கு மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர். ரத்த தான முகாம்  இதனைத் தொடர்ந்து மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க தஞ்சை கிளை சார்பில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில் 21 பேர்  ரத்த தானம் வழங்கினர். தான மாகப் பெறப்பட்ட ரத்தம், தஞ்சாவூர்  ராஜா மிராசுதார் அரசு மருத்துவ மனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள, அரசு  விரைவுப் போக்குவரத்து கழகத்தில்,  தொழிற்சங்க தலைவர் வி.பி.சிந்தன் நினைவு தினக் கொடியேற்று  நிகழ்ச்சி, விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியு கிளைத்தலைவர் செங் குட்டுவன் தலைமையில் நடை பெற்றது.  இதில், விரைவுப் போக்கு வரத்துக் கழக மாநில துணைச் செயலாளர் பி.வெங்கடேசன், விரை வுப் போக்குவரத்து கழக கிளைப் பொருளாளர் முருகேசன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே. அன்பு, ஆட்டோ சங்கம் மாநகரச் செயலாளர் ராஜா, தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் மில்லர்  பிரபு, மாவட்டத் தலைவர் மணி மாறன், அரசுப் போக்குவரத்து கழக சிஐடியு சங்க செயலாளர் ராமசாமி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினத்தையொட்டி, சிஐடியு திருச்சி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் புத னன்று காதி கிராப்ட் ஆட்டோ நிலை யம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட  சாலை போக்குவரத்து தொழிலாளர்  சங்க மாவட்டச் செயலாளர் சந்திரன்  தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், சிஐ டியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.  முன்னதாக தோழர் வி.பி.சிந்தன் உருவப்படத்திற்கு மலர்தூவி  புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதில்  சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்ட துணைத் தலைவர்  ஆண்டனி சுரேஷ் மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.  இதேபோன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவ லகம் முன்பு, தோழர் வி.பி.சிந்தன்  நினைவு தினத்தையொட்டி தண்ணீர்  பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், சங்க வட்டச்  செயலாளர் பழனியாண்டி, கோட்டத்  தலைவர் ஜான் போஸ்கோ ரவி உள்ளிட்டோர் வி.பி.சிந்தன் உருவப் படத்திற்கு மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர்.  திருவாரூரில் ரத்த தானம் தொழிலாளர் வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் வி.பி.சிந்தன் 37 ஆவது நினைவு தின ரத்த  தான முகாம், திருவாரூர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக புதன்கிழமை நடைபெற்றது. திருவாரூர் மருத்துவக் கல்லூரி  முதல்வர் ஜோசப்ராஜ், முகாமை துவக்கி வைத்து ரத்த தானம் குறித்து உரையாற்றினார். மருத்து வக் கல்லூரி நிலைய மருத்துவர் இராமச்சந்திரன், ரத்த வங்கியின் நிலைய பொறுப்பு மருத்துவர் மெர்சி  மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், பொருளாளர் இரா. மாலதி ஆகியோர் பங்கேற்றனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே. என்.அனிபா 39 ஆவது முறையாக  ரத்த தானம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரத்த  தானம் வழங்கினர்.

;