districts

img

குடிநீர் குழாய்க்காக தோண்டிய இடத்தை சரியாக மூடவில்லை: பொதுமக்கள் அவதி

கும்பகோணம், ஏப்.29- கும்பகோணம் மேலக்காவேரியில், குடிநீர்  குழாயை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக சரி செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள், கும்பகோணம் மாநகர ஆணையரிடம் கொடுத்துள்ள மனுவில்  தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநக ராட்சிக்குட்பட்ட மேலக்காவேரி புதுரோடு பகுதி யில், குடிநீர் குழாய் பழுதை சரி செய்கிற வகையில்,  கும்பகோணம் மாநகராட்சியால் புல்டோசர் மூலம் 100 மீட்டருக்கு மேல் பள்ளம் தோண்டி, குழாய் சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால், மேடு பள்ளமாகவும் குண்டும் குழியுமாகவும் இருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமங்கள் ஏற்படு கின்றன. இந்த பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் சரி செய் யப்பட்டு, ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் சரியாக மூடப்படாமல் அரைகுறையாக மூடப் பட்டிருப்பது மிகுந்த பாதிப்பை தருகிறது. இந்த  சாலைப் பகுதி ஏற்கனவே குறுகியதாக இருக் கிறது. மேலும், இந்த பள்ளத்தினால் பாதி சாலையை பயன்படுத்தப்பட முடியாத நிலை உள்ளதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே கும்பகோணம் மாநகராட்சி ஆணை யர், இந்த இடத்தை உடனடியாக பார்வையிட்டு,  அரைகுறையாக மூடப்பட்டு, குண்டு குழியுமாக  உள்ள இந்த சாலையை சரி செய்யுமாறு கேட்டுக்  கொள்கிறோம்.  சில மாதங்களுக்கு முன்புதான், குழி தோண் டப்பட்ட இடத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கப் பட்டது என்பதை கவனத்தில் கொண்டு, இந்தப் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்துகிற வகையில் சாலையை சரிசெய்து தர வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;