districts

திருச்சி முக்கிய செய்திகள்

மாதர் சங்க பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை, மே 10- மயிலாடுதுறையில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின்  முன்னணி ஊழியர்களுக் கான பயிற்சி வகுப்பு வெள்ளியன்று மாவட்டத்  தலைவர் ஆர்.சரிதா  தலைமையில் ஆர்.ஓ.ஏ கட்டிடத்தில் நடைபெற்றது. ‘மாதர் இயக்க வர லாறு-ஸ்தாபனம்’ என்ற தலைப்பில் மாநில பொதுச்செயலாளர் அ.ரா திகா, ‘களப்பணியை வளப்படுத்துவோம்’ என்ற தலைப்பில் ஆர். கலைச்செல்வி ஆகி யோர் உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் ஜி. வெண்ணிலா, மாவட்டப்  பொருளாளர் ஜி.கலைச் செல்வி உள்ளிட்டோர் உரையாற்றினர். சங்கத் தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

போதைப் பொருள் பறிமுதல்

பாபநாசம், மே 10 - தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரக பகுதியில் பாபநாசம் காவல் துணை கண்கா ணிப்பாளர் அசோக் மேற்பார்வையில், கபிஸ் தலம் காவல் ஆய்வா ளர் மகாலட்சுமி மற்றும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கபிஸ்தலம் பாலக்கரையில் மேல கபிஸ்தலம், காளியம் மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (51) மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை  கடையை சோதனை யிட்ட போது, அவரது கடையில் தமிழக அர சால் தடை செய்யப்பட்ட  135 பண்டல் ஹான்ஸ், 300 பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததுடன், மளிகை கடை உரிமை யாளர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டனர்.

கலந்துரையாடல் கூட்டம்

பாபநாசம், மே 10 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஊரகப் பகுதிகளில் உள்ள உதவிபெறும் பள்ளிகளில் வரும் கல்வி யாண்டில் இருந்து அமல்படுத்துவது தொ டர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியரின் சத்துணவு பிரிவு நேர்முக  உதவியாளர் தியாகரா ஜன், திட்டத்தை அமல் படுத்துதல் குறித்து விளக்கமளித்தார். பாப நாசம் ஊராட்சி ஒன்றிய  ஆணையர்கள் சிவ குமார், சுதா, வட்டார கல்வி அலுவலர் மணி கண்டன், பாபநாசம் ஒன்றியத்தில் உள்ள உதவிபெறும் தொடக்கப் பள்ளி தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

சிபிஎம் ரசீது வழங்கல்

மன்னார்குடி, மே 10 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கும் பேரவை  நடைபெற்றது. ஒன்றியச்  செயலாளர் கை.ஜெய பால் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. தமிழ்மணி, டி.முருகை யன், மாவட்டக் குழு உறுப் பினர்  ஆறு.பிரகாஷ் ஆகியோர் ரசீது வழங்கி னர். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் கே.தமிழ் மணி  சிறப்புரையாற்றி னார். நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

சட்ட தன்னார்வலர் தொண்டர்கள் தேர்வு: விண்ணப்பிக்க மே 20 கடைசி நாள்

தஞ்சாவூர், மே 10-  சட்ட தன்னார்வலர் தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இதுகுறித்து தஞ்சை  மாவட்ட சட்டப் பணிகள்  ஆணைக்குழு தலைவர் சுந்தர் ராஜன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:  தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி, தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்திற்கு (கும்பகோணம், பட்டுக் கோட்டை, ஒரத்தநாடு, பாப நாசம், திருவையாறு, பேரா வூரணி, திருவிடைமருதூர்) புதிதாக 50 சட்ட தன்னார் வல தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  விண்ணப்பிக்கும் நபர் களுக்கு வயது வரம்பு இல்லை. 18 வயதிற்கு மேற் பட்டவர்களாக மட்டும் இருக்க வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள், ஓய்வுபெற்ற அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழி யர்கள், பகுதி நேரப் பணியா ளர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் சட்ட  தன்னார்வலர் தொண்டர்  பணிக்கு விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பப் படிவத்தை  Thanjavur E-court WEB SITE-ல் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து மே 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, முதன்மை மாவட்ட நீதிபதி, ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம், தஞ்சை என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்க வேண்டும்.  மே 20 ஆம் தேதிக்கு  பிறகு வரும் விண்ணப்பங் கள் நிராகரிக்கப்படும். சட்டத் தன்னார்வலர் தொண் டர்கள் பணியானது சட்ட  சேவை மட்டுமே. உத்தியோ கம் இல்லை. இது தற்காலி கமானது. மேலும் சட்ட தன்னார்வலர் தொண்டர் பணிக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படாது. சேவைக்கு ஏற்ப மதிப்பூதியம் மட்டுமே அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் தஞ்சை பள்ளிகளில் 2,984 இடங்கள் ஒதுக்கீடு

தஞ்சாவூர், மே 9-  குழந்தைகளுக்கான இலவச மற்றும்  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளி களில் நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி,  முதல் வகுப்பு) 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு குறை வாக வருவாய் ஈட்டும் நலிவடைந்த பிரிவினர்  ஆகியோருக்கு சேர்க்கை வழங்கப்படு கிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவின்  கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றோர்,  ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளியாக இருக்கும்  குழந்தை ஆகிய சிறப்பு பிரிவின் கீழ்  விண்ணப்பிப்பவர்கள்,  உரிய அலுவல ரால் வழங்கப்பட்ட சான்றினை இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் போது பதி வேற்றம் செய்தல் வேண்டும்.  மேலும், பள்ளியிலிருந்து ஒரு கி.மீட்ட ருக்குள் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க லாம். இணையதளம் மூலம் அதிகபட்சமாக 5  பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், வட்டார  வள மையங்கள், மாவட்டக் கல்வி அலுவ லகங்கள், தஞ்சாவூர் முதன்மைக் கல்வி  அலுவலகம் மற்றும் இ-சேவை மையங்களில்  பெற்றோர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில்  குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் அவற்றில் ஏதேனும் ஒரு பள்ளியில் மட்டும் சேர்ந்து கொள்ளலாம். இந்த இட ஒதுக்கீட்டின்படி நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பில் சேரு வதற்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 254  மெட்ரிக்குலேசன், நர்சரி மற்றும் பிரைமரி  பள்ளிகளில் 2,984 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.  எனவே பெற்றோர் மே 20 ஆம் தேதி  வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க லாம். தகுதியுடைய மற்றும் தகுதியற்ற மாண வர்களின் விவரங்கள் மே 27 அன்று பிற்பகல் 5 மணிக்கு அறிவிப்பு பலகையில் வெளி யிடப்படும்.  பள்ளியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங் களுக்கு கூடுதலாக விண்ணப்பம் பெறப்பட்டி ருந்தால், குலுக்கல் முறையில் மே 28 அன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.

வெறி நாய் கடித்து 12 பேர் காயம்

பொன்னமராவதி,  மே 10 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சொக்க நாதபட்டி கிராமத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இந்நிலையில் கிரா மத்தில் சுற்றித் திரிந்த வெறி நாய் ஒன்று பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்ததில், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பெருமாள், செல்வராஜ், ஜெயா, தன லட்சுமி, ராஜாமணி உட்பட 12 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் வளையபட்டி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பொன்னமராவதி பகுதி களில் பொதுமக்களை அச்சு றுத்தி திரியும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தவும், அவற்றை கட்டுப்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

சாலையை விரிவாக்க மரங்கள் அகற்றம்: புதிய மரக்கன்றுகள் நடக் கோரிக்கை

தஞ்சாவூர், மே 10- பேராவூரணி கடைவீதியில், சாலை விரி வாக்கத்தின் போது அகற்றப்பட்ட மரங்க ளுக்கு பதிலாக, புதிதாக மரக்கன்றுகள் நட்டு  பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலரும், பேரா வூரணி பேரூராட்சி 11 ஆவது வார்டு உறுப்பி னருமான மகாலட்சுமி சதீஷ்குமார், பேரா வூரணி நெடுஞ்சாலைத் துறை உதவி செயற் பொறியாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.  அந்த மனுவில், “சேதுசாலையில் சாலை  விரிவாக்கத்தின் போது, நூற்றுக்கணக்கான மிகப் பழமை வாய்ந்த வேம்பு, புளி, வாகை,  புங்கன் மரங்கள் என அனைத்தும் வெட்டி முழுவதுமாக அழிக்கப்பட்டன.  தற்போது கோடை காலத்தில், மரங்களை  வெட்டியதற்கான விளைவு தெரிகிறது. சாலையில் பெரியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வணிகர்கள், பயணி கள் அனைவரும் நடக்க முடியாமலும், சுட்டெ ரிக்கும் வெயிலின் தாக்கத்தால் ஒதுங்கக்கூட  இடமில்லாமலும் தவித்து வருகின்றனர்.  எனவே கடைவீதி, ஆவணம் சாலை, புதுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை, முதன்மைச் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிக்கவும், வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், தற்போதைய மற்றும்  அடுத்த தலைமுறையினரை பாதுகாக்கவும்  நெடுஞ்சாலை துறையின் மூலம் பேராவூ ரணி நகரை பசுமையோடு பாதுகாக்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.6 கோடி மதிப்பிலான போலி ஹால்மார்க் நகைகள் பறிமுதல்

புதுக்கோட்டை, மே 10 - புதுக்கோட்டை நகரிலுள்ள ஒரு நகைக்கடையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போலி ஹால்மார்க் நகைகளை இந்திய தர நிர்ணய அமைவ கத்தினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியிலுள்ள ஒரு நகைக்கடையில் இந்திய தர நிர்ணய அமைவகத்தின் (பிஐஎஸ்) மதுரை கிளை அதி காரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையின் முடிவில், அதன் மதுரை அலுவலக மூத்த  இயக்குநர் சு.த.தயானந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுக்கோட் டையிலுள்ள லிங்கேஸ்வர் நகை மாளிகையில் வியாழக்கிழமை அமலாக்க சோதனை நடத்தப்பட்டதில் பிஐஎஸ் முத்திரையிடப்பட்ட, போலியான ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட, தனித்துவ அடையாள இலக்கம் (எச்யுஐடி) இல்லாமல் இருந்த 9.151 கிலோ நகைகள் சுமார்  ரூ. 6 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய தர நிர்ணயச் சட்டத்தின்கீழ் முறைப்படி தர முத்திரை கள் இல்லாமல் விற்பனை செய்வது குற்றம். இதன்படி அவர்கள் மீது  குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் நகைகள் வாங்கும்போது, ‘பிஐஎஸ் கேர்’ என்ற செய லியில் அந்தக் கடை தொடர்பான தரச் சான்றிதழ் பெறப்பட்டுள்ள தக வல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் புகார்கள்  இருந்தால், மதுரை கப்பலூர் சிட்கோ வளாகத்தில் பிஐஎஸ் மதுரை  கிளை அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கலாம் என்றார்.

தனியார் சிமெண்ட் ஆலை  குப்பை குடோனில் தீ விபத்து

அரியலூர், மே 10 - அரியலூர் மாவட்டம் ஓட்டக் கோவில் கிராமத்தில் டால்மியா சிமெண்ட் நிறுவனம் அமைந்துள்ளது.   தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு குப்பைகள் லாரிகள் மூலம், இந்த சிமெண்ட் ஆலைக்கு கொண்டு  வரப்பட்டு, சிமெண்ட் ஆலையில் உள்ள இயந்திரத்தில் எரிக்கப்படுவது வழக்கம். மற்ற பகுதிகளில் இருந்து  கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளி  கிடங்கில் சேகரிக்கப்பட்டு, பின்னர் எரிப்புக்கு கொண்டு  செல்லப்படுவது வழக்கம்.  இந்நிலையில் வெள்ளியன்று மதியம் பிளாஸ்டிக் கழிவுகள் வைக்கப்பட்டிருந்த திறந்தவெளி கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வானளாவிய அளவில் மிகப்பெரிய புகைமூட்டம் ஏற்பட்டது. ஆலையை சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கரும்புகை பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  சிமெண்ட் ஆலை மற்றும் அரியலூர் தீயணைப்பு துறையை சேர்ந்த இரு தீயணைப்பு வாகனங்களும் தீயை  அணைத்து கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடு பட்டனர். வானளாவிய புகை மூட்டத்தால் ஆலையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

;