districts

திருச்சி முக்கிய செய்திகள்

புகளூரில்  நீர், மோர் பந்தல் திறப்பு

கரூர், மே 7 - கடும் கோடை வெயி லில் இருந்து பொது மக்கள் தங்களை பாது காத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக் கில் கரூர் மாவட்டம், புக ளூர் வட்டம், செம்படாபா ளையம் கிராமத்தில் தோகை முருகன் பில்டர்ஸ்  சார்பில் பொதுமக்க ளுக்கு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. விழாவிற்கு தோகை முருகன் தலைமை வகித் தார். கரூர் கோல்டு பை னான்ஸ் நிர்வாக இயக்கு நர் சந்தோஷ் வரவேற்று  பேசினார். புகளூர் நக ராட்சி தலைவர் குணசேக ரன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். கபி லர்மலை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மலையப்பசாமி, புகளூர்  நகராட்சி துணைத் தலை வர் பிரதாபன், சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், புக ளூர் நகர்மன்ற உறுப்பி னர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

சிபிஎம் உறுப்பினர் ரசீது வழங்கல்

திருவாரூர், மே 7- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவா ரூர் மாவட்டம் கொர டாச்சேரி ஒன்றியத்தில் உள்ள கட்சி உறுப்பினர் களுக்கு உறுப்பினர் கார்டு வழங்கும் பேரவை செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. பேரவைக்கு கட்சியின் கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி. ஜெயபால் தலைமை வகித் தார். மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி கட்சி  உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் கார்டு வழங்கி உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் பி.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ்.தம்புசாமி,  கே.சீனிவாசன், கே.எஸ். செந்தில் பங்கேற்றனர். நன்னிலம் ஒன்றியம் பேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர்களுக்கு ரசீது வழங்கும் மே தின பேரவை நடைபெற்றது. சிபிஎம் நன்னிலம் ஒன்றிய  செயலாளர் கே.எம். லிங்கம் தலைமை வகித் தார். மாநிலக் குழு உறுப் பினர் ஐ.வி.நாகராஜன் உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கினார். முன்னதாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், எம்.கலைமணி, டி. வீரபாண்டியன் ஆகி யோர் உரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர் கள் ஜெ.முகமது உது மான், கே.தமிழ்ச்செல்வி, எஸ்.எம்.சலாவுதீன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

கால்நடை  தடுப்பூசி முகாம்

தஞ்சாவூர், மே 7-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி கிராமத் தில், புதுக்கோட்டை புஷ் கரம் வேளாண் அறிவியல்  கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் கிராம வேளாண் அனுபவத் திட் டத்தின் ஒரு பகுதியாக கால்நடை தடுப்பூசி முகாம் செவ்வாயன்று நடைபெற்றது.  திருச்சிற்றம்பலம் கால்நடை மருத்துவர் செந்தில்குமரன் தலை மையில் நடைபெற்ற இம் முகாமில் 400 ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி தடுப் பூசி செலுத்தப்பட்டது. மேலும் பசு மாடுகளுக்கு சினை ஊசி மற்றும் கோழிகளுக்கு மருந்து களும் வழங்கப்பட்டன. முகாமில் கால்நடை ஆய் வாளர் கவிதா, புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

அரசுப் பேருந்தில் தவறவிட்ட  நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டு

திருச்சிராப்பள்ளி,  மே 7 - திருச்சியில் அரசுப் பேருந்தில் பெரம்பலூர் பெண் தவறவிட்ட 10 பவுன் தங்க நகைகள் கொண்ட துணிப்பை அவரிடம் ஒப்ப டைக்கப்பட்டது. நகைப் பையை ஒப்படைத்த ஓட்டு நர் மற்றும் நடத்துநருக்கு  பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சென்னை மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்  கொண்டு திருச்சிக்கு சனிக் கிழமை இரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை திருச்சி உறை யூரைச் சேர்ந்த ரமேஷ் ஓட்ட, திருச்சி காட்டூரைச் சேர்ந்த கோபாலன் நடத்துநராகப் பணியாற்றினார். இந்தப் பேருந்தில், பெரம் பலூர் வடக்கு மாதவி சாலை சாமியப்பா நகரைச்  சேர்ந்த மதீனா என்ப வர், தனது தாய், பாட்டியு டன் சென்னை மாதவரத்தி லிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொண்ட துணிப்பையுடன் ஏறி, பெரம்பலூரில் பையை  பேருந்திலேயே மறந்து  வைத்துவிட்டு இறங்கி விட்டார். பேருந்து திங்களன்று அதிகாலை திருச்சி கன் டோண்மென்ட் கோட்ட போக்குவரத்து பணி மனைக்கு வந்த போது, அதில் கேட்பாரற்றுக் கிடந்த  பையை ஓட்டுநரும், நடத்து நரும் சோதனையிட்டனர். பையில், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்த தையடுத்து, அதனை பணி மனை பாதுகாவலரிடம் ஒப்ப டைத்தனர். இதனிடையே தவற விட்ட பையைத் தேடி மதீனா திருச்சி பணிமனைக்கு வந்தார். அவர்களிடம் 81. 150 கிராம் தங்க மற்றும் 149. 100 கிராம் வெள்ளி நகைகள்  உள்ளிட்டவை அடங்கிய துணிப் பையை ஓட்டுநர் ரமேஷ், நடத்துநர் கோபா லன் ஆகியோர் ஒப்படைத்த னர். அப்போது, திருச்சி கோட்ட மேலாளர் ஜேசுராஜ், கிளை மேலாளர் சரவண பாபு  உள்ளிட்டோர் உடனிருந்த னர். நகை பையை பாது காப்பாக எடுத்து வைத்து ஒப்படைத்த அரசுப் பேருந்து  ஓட்டுநர் மற்றும் நடத்து நருக்கு பல்வேறு தரப்பின ரும் பாராட்டு தெரிவித்தனர்.

பொன்னமராவதி பேரூராட்சி மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்

பொன்னமராவதி, மே 7 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரை முறையாகவும் சிக்கனமாகவும் பயன் படுத்தி சீரான குடிநீர் விநியோகம் செய்ய  ஒத்துழைக்க வேண்டுமென தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக பொன்னமராவதி பேரூ ராட்சியின் செயல் அலுவலர் கணேசன் விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெப்ப அலையினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோடை வெயில் எந்தாண்டும் இல்லாத அள விற்கு, இந்தாண்டு அதிகமாக உள்ளதால் கடும் வறட்சி ஏற்பட்டு நீர்நிலைகள் வறண்டு  காணப்படுகின்றன.  நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் பொன்னமராவதி பேரூராட்சிக்கு வழங்கப்படுகிற காவிரி குடி நீர் ஆதாரமான காவிரியிலும் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது.  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம்  வழங்கப்படும் குடிநீரை, பொன்னமராவதி பேரூராட்சியின் அனைத்து வார்டு பகுதி களுக்கும் சீராக வழங்க வசதியாக, பொது மக்கள் குடிநீரை முறையாகவும், சிக்கனமாக வும் பயன்படுத்திட வேண்டும்.  மேற்படி குடிநீரை தற்போதைய சூழ் நிலையை கருத்தில் கொள்ளாமல், முறைகே டாக பயன்படுத்தினாலோ அல்லது மோட்டார் வைத்து உறிஞ்சினாலோ, குடிநீர்  தவிர்த்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி னாலோ குடிநீர் குழாய் இணைப்பை துண்டிப் பதோடு, குற்றவியல் நடவடிக்கையும் மேற் கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை கருத் தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன் படுத்தி அனைவருக்கும் சீரான குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க கோரிக்கை

பாபநாசம், மே 7 - மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டு மென வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட  விவசாய அணித் தலைவர் முருகராஜ் மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப்பிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் முடிந்த சம்பா பருவத்தில் ஆற்றுத் தண்ணீர் முழுமை யாக கிடைக்கப் பெறவில்லை. பருவ மழையும் போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசா யிகள், தற்போது மின் மோட்டார் உதவியோடு நெல் நடவு செய்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மும்முனை மின்சாரம் 6 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. அது வும்கூட பல நேரங்களில் இடையிடையே தடைபடு கிறது. இதனால் விவசாயிகள் மின்சாரம் எப்போது தடை படுமோ என்ற பதற்றத்தில், மின்சார மோட்டார் கொட்ட கையில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. அதிலும் பலமுறை குறைந்த அழுத்த மின்சாரமே வருகிறது. இத னால் பம்பு செட் மோட்டார்கள் பழுதடைகின்றன.  குறைந்த நேரமே மும்முனை மின்சாரம் கிடைப்ப தால், இதைக் கொண்டு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச  முடியாமல், சேறு இறுகி வயல் காய்ந்து வருகிறது. எனவே தாங்கள் இதில் உரிய கவனம் செலுத்தி மும்முனை மின்சாரத்தை எட்டு மணி நேரம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பொறையார் சர்மிளா பள்ளி  நூறு சதவீதம் தேர்ச்சி

மயிலாடுதுறை, மே 7 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் சர்மிளா காடஸ் மெட்ரிக் பள்ளி  12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி  பெற்றுள்ளது. மாணவர் எஸ்.சுதர்சன் 572 மதிப்பெண் பெற்று  பள்ளி அளவில் முதலிடமும், மாணவி எஸ்.இரஞ்சனி 570 மதிப்பெண்களு டன் இரண்டாமிடமும், மாணவர் ஜெ.மாசின் 568 மதிப்பெண்களுடன்  மூன்றாமிடமும், மாணவி பி.சஹானா 567 மதிப்பெண்களுடன் நான்காமி டமும், மாணவி பி.தாருணி 555 மதிப்பெண்களுடன் ஐந்தாமிடமும் பெற்றுள் ளனர். 550-க்கு மேல் 6 பேரும், 500-க்கு மேல் 10 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 2 மாணவர்கள்  100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர், ஆசிரி யர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் வாழ்த்தினர்.

ஸ்ரீமகாதேவ குருஜி வித்யாலயா  பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

திருவாரூர், மே 7 - திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள ஸ்ரீமகாதேவ குருஜி வித்யா லயா பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்று,  25 ஆவது ஆண்டும் தொடர் சாதனை புரிந்துள்ளனர். இப்பள்ளியில் ஏ.பி.ஸ்ரீ ஹர்ஷினி 586 மதிப்பெண்களுடன் முதலி டமும், எம்.அஸ்மிதா 583 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், ஹச்.வஃயா பாத்திமா 579 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு  பெருமை சேர்த்துள்ளனர். தேர்வெழுதிய 57 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் 100 சத வீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் இயற்பியல்-1, கணிதம்-1, கணினி அறி வியல்-12, வணிகவியல்-1, பொருளியல்-1, கணக்குப் பதிவியல்-1 என முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 12 மாண வர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவர்களும், 450 மதிப்பெண் களுக்கு மேல் 25 மாணவர்களும், பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி  பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் எம்.டி.பாணி மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

மாவட்ட அளவில் 3 ஆம் இடம்: சில்வர் ஜூப்ளி மெட்ரிக் பள்ளி சாதனை

மயிலாடுதுறை, மே 7- மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிக் பள்ளி (டார்கெட்) மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள இப்பள்ளி யின் மாணவர் எஸ்.ஆதித்யா 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளி  அளவில் முதலிடம் பிடித்துள்ளார். எஸ்.வைத்தீஸ்வர் 581 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் இரண்டாமிடமும், ஆர்.திவாஷினி 580 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். 550-க்கு மேல் 28 பேரும்,  500-க்கு மேல் 78 பேரும், 450-க்கு மேல் 127 பேரும், 400-க்கு மேல் 186 பேரும் மதிப்பெண்கள்  பெற்று சாதனைப் படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர், பள்ளி நிர்வாகக்குழு, ஆசிரி யர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

சுட்டெரிக்கும் வெயில்: மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

திருவாரூர், மே 7 - அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள தால், திருவாரூர் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு  மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இத னால் பொது மக்கள் மதிய நேரத்தில் வெளி யில் செல்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.  வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டு மென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் அவசிய தேவை களின்றி வெளியே செல்வதை தவிர்க்க  வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல்  பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர்  குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிட்டா லும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பயணத்தின்போது குடி நீரை எடுத்துச் செல்ல வேண்டும். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகளை பருகி நீரிழப்பை தவிர்க்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியில் செல்லும்போது கண் ணாடி மற்றும் காலணி அணிந்தும், குடை (கருப்பு நிறத்தை தவிர்த்து) எடுத்துச் செல்லவும் வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்லக் கூடாது. கால்நடைகளை நிழல் தரும் கூரைக்கு அடியில் கட்ட வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடக் கூடாது. பறவைகளுக்கு போதுமான நிழற் கூரைகள் அமைத்து கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். பருவநிலை மாற்றத் தினால் இந்தாண்டு கோடை வெயில் அதிக மாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடு களிலும் உள்ள மின்வயர்கள் உருகி தீ விபத்து  ஏற்பட வாய்ப்புள்ளது. வீடுகளில் சமையல் கியாஸ் சிலிண் டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அணைத்துவிட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவன மாக கையாள வேண்டும். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் அதிக வெடிபொ ருள் தயாரிக்கும் மற்றும் விற்பனை கடைகள் உள்ளன. இங்கு தீ விபத்துகள் ஏற்படா வண்ணம், பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் விதிமுறைகளின்படி வெடிபொருட்களை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இருப்பு  வைக்க வேண்டும். வெடிபொருள் இருப்பு களை வீடுகளில் வைக்கக் கூடாது. பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை தொழி லாளர்கள் பாதுகாப்பான முறையில் இருப் பதை உரிமையாளர்கள் உறுதி செய்திட  வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.

போதை மருந்துகள் விற்ற வாலிபர் கைது

திருச்சிராப்பள்ளி, மே 7- திருச்சி எடைமலைப்பட்டி புதூர் கொல்லாங் குளம் அருகில் யானை பம்ப் பகுதியில் போதை  மருந்து, மாத்திரைகள் இருசக்கர வாகனத்தில் உலா வந்து விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் அப்பகுதியை தீவிர மாக கண்காணித்தனர். இந்நிலையில் சந்தேகத்துக் கிடமாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை  பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்  போதை மாத்திரைகள், மருந்துகள் விற்றது தெரிய  வந்தது.  அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில், திருச்சி கிராப்பட்டி அன்புநகரைச் சேர்ந்த பாலாஜி  (24) என்பது தெரிந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து இரு சக்கர வாக னம், போதை மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள்,  அதற்காக பயன்படுத்தக் கூடிய டெர்மினல் வாட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

;