districts

திருச்சி முக்கிய செய்திகள்

கோடை பருவத்தில் எள், உளுந்து, நிலக்கடலை சாகுபடி செய்யலாம்

தஞ்சாவூர், மே 6-  கோடை பருவத்தில் எள், உளுந்து, நிலக்கடலை சாகுபடி  செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர்  வட்டார வேளாண் உதவி இயக்குநர் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கோடை பருவத்தில் உளுந்து, எள், நிலக்கடலை சாகுபடி  செய்யும் விவசாயிகள் நிலங்களில், பூச்சி மற்றும் பூஞ்சை காளான் அழிக் கப்பட்டு தீமை செய்யும் புழுக்கள் பறவைகளுக்கு இரையாகி வெயி லின் தாக்கத்தில் அழிந்துவிடும்.  கோடை மழை பெய்யும் போது  மழை நீர் தேங்குவதால் மண்ணுக்கு அடியில் காற்று புகுந்து ஈரப்பதம் இருக்கும். இதனால் பயிர்கள் செழித்து வளர்ந்து கூடுதல் மகசூல்  கிடைப்பதால் குறைந்த சாகுபடி செலவில் அதிக லாபம் கிடைக்கும்.  எள் சாகுபடிக்கு ஏக்கருக்கு 2 கிலோ விதையே போதுமானது. அதேபோன்று நிலக்கடலை நீர் ஆதாரமுள்ள மேட்டுப்பாங்கான இடங் களில் பயிரிட்டு அதிக லாபம் பெற லாம். பயிர் சாகுபடிக்கு தேவையான  உளுந்து வம்பன் 8 சான்று விதை கள் மற்றும் உயிர் உரங்கள் தற்போது  மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளதால் விவசாயிகள் கிராம விதை திட்டத் தின்கீழ் கிலோவிற்கு 48 ரூபாய் மானியத்தில் பயன் பெறலாம். மானியம் இல்லா இடுபொருள் கள், நுண்ணூட்டக் கலவைகள் மற்றும் நோய் தாக்குதலை தடுக்க  பயன்படுத்தப்படும் உயிரியல் கட்டுப் பாட்டு காரணிகளான சூடோமோ னோஸ் டிரைகோ, டெர்மாவிரிடி ஆகிய இடுபொருட்களையும் அனைத்து வேளாண் விரிவாக்க  மையங்களில் பெற்று பயனடை யலாம்” என தெரிவித்துள்ளார்.

நடனப் பள்ளியில் சலங்கை பூஜை விழா

தஞ்சாவூர், மே 6 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அமிர்தம் திருமண மஹாலில் ஸ்ரீ நீவி நடனப்பள்ளி சார்பில், முதலாவது சலங்கை பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்துப் பேசினார்.  தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.சிங்காரம் ஆகியோர் நடனப்பள்ளி குழந்தைகளை வாழ்த்திப் பேசினர்.  இதில் மாணவிகள் பூர்வ தர்ஷிகா, பிரித்திகா, கீதாஞ்சலி, ஐஸ்வர்யா, தஷ்மிகா, சாதனா, இனிய பிரசன்னாஸ்ரீ ஆகியோரின் நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இலக்கியப் பேச்சாளர் அ.அப்துல் மஜீத், பேராவூரணி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி. ராஜேந்திரன், அமுதம் பில்டர்ஸ் கந்தசாமி, குமரப்பா சிபிஎஸ்சி கல்விக் குழும புல இயக்குனர் அஸ்வின் கணபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மின் ஊழியர் மத்திய  அமைப்பு மாவட்ட மாநாடு

கரூர், மே 6 - மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் மாவட்ட 12  ஆவது மாநாட்டை கரூரில் நடத்திட தீர்மானிக்கப் பட்டுள்ளது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் மாவட்ட குழு  கூட்டம் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை யில், சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் நடை பெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். மின் ஊழியர் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் க.தனபால் மற்றும் மாவட்ட குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் மாவட்ட 12 ஆவது மாநாட்டை கரூரில் ஜூலை 17 அன்று  நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக மாநாட்டு  வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு குழு  தலைவராக ஈஸ்வரன், செயலாளராக நெடுமாறன், பொரு ளாளராக கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

மேல் முறையீட்டு  மனுக்கள் மீது விசாரணை

மயிலாடுதுறை, மே 6-  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி முன்னிலையில், மாநில தகவல் உரிமை  ஆணையர் மா.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 இன் கீழான 20  மேல்முறையீட்டு மனுக்களுக்கு ஆணையர் விசாரணை  மேற்கொண்டார். விசாரணையின் போது மேல்முறையீட்டு  மனுக்களுக்கு தொடர்புடைய நபர்கள் மற்றும் தொடர் புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  கூடுதல் ஆட்சியர் மு.ஷர் ஆலம், மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல் ஆகி யோர் உடனிருந்தனர்.

போதை மருந்து, மாத்திரைகள்  விற்ற 2 இளைஞர்கள் கைது

திருச்சிராப்பள்ளி, மே 6 - திருச்சி பீமநகரில் போதை மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட் டனர். திருச்சி பாலக்கரை காவல் சரகம் பீமநகர் ஹீபர் ரோடு  பகுதியில் போதை மாத்திரைகள், மருந்து மற்றும் ஊசிகள்  விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது.  இதையடுத்து பாலக்கரை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார், பீமநகர் ஹீபர்ரோடு பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக  கண்காணித்தனர். அப்போது போதை மாத்திரைகள், ஊசி கள் விற்ற இருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.  விசாரணையில், அவர்கள் திருச்சி பாலக்கரை பீமநகர்  பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (24), ஹரிஷ் ரகுமான் (21) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 100  மில்லி சோடியம் புளோரைடு ஊசி மருந்து மற்றும் 100  மில்லி கிராம் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  போதை மாத்திரைகள், மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் கைதான ஹரிகரன் மீது பாலக் கரை காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் உள்ளன  என்பது குறிப்பிடத்தக்கது.

‘வீட்டை மீட்டுத் தர வேண்டும்’ ஆட்சியர் அலுவலகத்தில்  குழந்தைகளுடன் பெண் தர்ணா

அரியலூர், மே 6 - தனது வீட்டை மீட்டுத் தர வலியுறுத்தி, தனது ஐந்து குழந்தைகளுடன் பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலு வலக நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார். அரியலூர் மாவட்டம் ஆலத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலவன் (45). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது  தந்தை வழி சொத்தை தனது உடன்பிறந்த நான்கு சகோ தரர்களுக்கும் பிரித்துக் கொடுத்த நிலையில், தனக்கு உரிய பங்கில் வீடு கட்டி, தனது மனைவி மற்றும் ஐந்து  குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  இந்நிலையில் வேலவனின் சகோதரர்கள், தங்களுக்கு  சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளீர்கள் எனக் கூறி,  வீட்டை பிரித்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து வேல வனின் மனைவி புஷ்பராணி கடந்த ஏப்.30 அன்று, வீட்டை  சேதப்படுத்திய எனது கணவனின் சகோதரர்கள் நான்கு  பேர் மீது நடவடிக்கை எடுத்து, எனது வீட்டை மீட்டு தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.  அம்மனு உடையார்பாளையம் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்ட நிலையில், நீதிமன்றத்தை நாடி வீட்டினை மீட்டுக் கொள்ளுமாறு கோட்டாட்சியர் தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பராணி, நீதி மன்றத்தில் வழக்கு போட்டால் தீர்வு கிடைக்க குறைந்தது  15 ஆண்டுகளாவது ஆகும். அதுவரை எனது குழந்தைகளு டன் நான் எங்கே தங்குவது என கேள்வி எழுப்பினார். மேலும், எனது வீட்டை மீட்டு தர வேண்டும் எனக் கூறி  திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு, தனது 5 குழந்தைகள் மற்றும் கணவருடன் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டார்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரிடம் சமாதான  பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலந்து  சென்றனர்.

பேராவூரணி அரசு கல்லூரியில்  மாணவர் சேர்க்கை உதவி மையம்

தஞ்சாவூர், மே 6-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்  முனைவர் இரா.திருமலைச்சாமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: பேராவூரணி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஆங்கிலம்), பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்சி  கணிதம், பி.எஸ்சி இயற்பியல், பி.எஸ்சி வேதி யியல் மற்றும் எம்.ஏ (தமிழ்) ஆகிய பாடப்  பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளது.  பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாண வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய பேராவூரணி அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்  சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.  இந்த மையம் 6.5.2024 முதல் காலை 10  மணியிலிருந்து மாலை 5 மணி வரை செயல் படும். மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங் களை ஆன்-லைனில் மட்டுமே பதிவு செய்ய  வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரி யிலும் பதிவு செய்யலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

;