districts

img

காஜா பீடி கம்பெனி நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் போர்க்கொடி

திருநெல்வேலி, ஏப். 29- திருநெல்வேலி  காஜா பீடி கம்பெனி யில் பணிபுரியும் எழுத்தர், சூப்பர் வைசர்களுக்கு கடந்த ஆறு மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக போனஸ் வழங்கவில்லை. 28 மாதங்களாக தொழிலாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் பணத்தை  வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தவில்லை. தொழிலாளர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் காஜா பீடி நிர்வாகத்திடம் அங்கு பணிபுரியும் எழுத்தர், சூப்பர்வைசர்கள் பலமுறை முறையிட்டும் நிர்வாகம்  செவி சாய்க்கவில்லை. 

இதனை தொடர்ந்து  காஜா பீடி கம்பெனியில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் அனைவரும்  சிஐடியு பீடி தொழிலாளர் சங்கத்தில் இணைந்தனர்.

இந்த  கூட்டத்தில் சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.மோகன்,  சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.முருகன், பீடி தொழிலாளர் சங்கத்தின்  பொதுச் செயலாளர் கே.மாரிச் செல்வம்,  மாவட்ட துணைச் செய லாளர் சையத் அலி, சாலைப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர்  சதக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிளைத் தலைவராக ஷாஜகான்,  செயலாளராக  சாகுல் ஹமீது, பொருளாளராக அப்துல் கரீம், துணைத் தலைவராக ஹயாத், துணைச் செய லாளராக காஜாமைதீன்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் 6 மாத காலமாக பாக்கி வைத்துள்ள சம்பள த்தை     உடனடி யாக வழங்கிட வேண்டும்,  28 மாதங் களாக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் பணத்தை தொழிலாளர் வைப்பு நிதி அலு வலகத்தில் உடனடியாக செலுத்த வேண்டும், கடந்த ஐந்து வருடங்களாக பாக்கி வைத்துள்ள போனஸ் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை எனில் உடனடியாக தொழிலாளர் துறையில் வழக்கு தொடர்வது, காஜா  பீடி நிர்வாகத்தை எதிர்த்து இயக்கத்துக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டது. ஷாஜகான் நன்றி கூறினார்.

;